பொது செய்தி

தமிழ்நாடு

மாரியம்மா எங்கள் மாரியம்மா...!

Added : ஆக 13, 2021
Share
Advertisement
மேட்டுப்பாளையம், பெரியநாயக்கன்பாளையம், அன்னுார், சூலுார் உட்பட பகுதிகளில் உள்ள அம்மன் கோவில்களில், நேற்று சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டன.மேட்டுப்பாளையம் நகரில், பாக்குக்கார தெருவில் உள்ள மாகாளியம்மன் கோவிலில், அம்மன் வெள்ளிக்கவசம் அணிந்து அருள்பாலித்தார். நடூரில், ஸ்ரீ மகா மாரியம்மன் மீனாட்சி சுந்தரேஸ்வரர் சமேதரராக சிறப்பு அலங்காரத்தில் காட்சியளித்தார்.காரமடை
 மாரியம்மா எங்கள் மாரியம்மா...!

மேட்டுப்பாளையம், பெரியநாயக்கன்பாளையம், அன்னுார், சூலுார் உட்பட பகுதிகளில் உள்ள அம்மன் கோவில்களில், நேற்று சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டன.மேட்டுப்பாளையம் நகரில், பாக்குக்கார தெருவில் உள்ள மாகாளியம்மன் கோவிலில், அம்மன் வெள்ளிக்கவசம் அணிந்து அருள்பாலித்தார். நடூரில், ஸ்ரீ மகா மாரியம்மன் மீனாட்சி சுந்தரேஸ்வரர் சமேதரராக சிறப்பு அலங்காரத்தில் காட்சியளித்தார்.காரமடை அருகே கண்ணார்பாளையத்தில், ஆதி காமாட்சி அம்மன் கோவிலில், அம்மன் மலர் அலங்காரத்தில் அருள்பாலித்தார்.
காரமடையில், கண்ணார் பாளையம் ரோட்டில், மாகாளி அம்மன் சிறப்பு அலங்காரத்தில் காட்சியளித்தார். ஆடி வெள்ளியை முன்னிட்டு, கோவிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. வனபத்ரகாளியம்மன் கோவில் முன்புறம் கற்பூரம் ஏற்றி பக்தர்கள் வழிபாடு செய்தனர். * அன்னுார் ஓதிமலை ரோட்டில் உள்ள பிரசித்தி பெற்ற பெரியம்மன் கோவிலில், எலுமிச்சை, பீட்ரூட், வெண்டை, கத்தரி உட்பட 16 வகையான, 1008 காய்கறிகளில் அலங்காரம் செய்யப்பட்டிருந்தது. பக்தர்கள் கோவிலில் முன்புறம் நின்று தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டனர்.அன்னுார் தென்னம்பாளையம் ரோட்டில் உள்ள ஆதிபராசக்தி சித்தர் சக்தி பீடத்தில், 3006 வளையல்களால் ஆதிபராசக்தி சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்தார். ஏராளமான செவ்வாடை பக்தர்கள் ஆதிபராசக்தியை வழிபட்டனர். சின்னம்மன் கோவில், எல்லப்பாளையம் சவுடேஸ்வரி அம்மன் கோவில், குன்னத்துார் வீரமாத்தி அம்மன் கோவில் என, 50க்கும் மேற்பட்ட கோவில்களில், திரளான பக்தர்கள் ஆடி வெள்ளி வைபவத்தில் பங்கேற்றனர்.* சூலுார், கருமத்தம்பட்டி சுற்றுவட்டார கிராமக்கோவில்களில் சிறப்பு பூஜைகள் நடந்தன. அரசூர் அடுத்த பச்சாபாளையம் அழகு நாச்சியம்மன், அரசூர் அங்காளம்மன், கரவளி மாதப்பூர் மாதாங்கி அம்மன் கோவில்களில் சிறப்பு அபிஷேக அலங்கார பூஜைகள் நடந்தன. பக்தர்கள் பங்கேற்று வழிபட்டனர்.
பக்தர்களுக்கு மங்களப் பொருட்கள் வழங்கப்பட்டன.* பெரியநாயக்கன்பாளையத்தில் உள்ள பழமைவாய்ந்த வீரமாஸ்தி அம்மன் கோவிலில், சிறப்பு அலங்காரத்தில் அம்மன் எழுந்தருளினார். பெண்களுக்கு வளையல், மஞ்சள் கயிறு, குங்குமம் உள்ளிட்ட பிரசாதங்கள் வழங்கப்பட்டன. பெரியநாயக்கன்பாளையம் வீரபாண்டி பிரிவில் உள்ள வி.கே.வி., நகர் குடியிருப்பு பகுதியில், செல்வ விநாயகர் கோவில் வளாகத்தில் உள்ள ஸ்ரீ துர்க்கை அம்மன், சிறப்பு மலர் அலங்காரத்தில் எழுந்தருளி, பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
நரசிம்மநாயக்கன்பாளையம் காமாட்சி அம்மன், சக்தி மாரியம்மன், அப்புலுபாளையம் மாகாளியம்மன், காமராஜ் நகர் ராஜராஜேஸ்வரி அம்மன், ஜோதிபுரம் தண்டுமாரியம்மன் உள்ளிட்ட கோவில்களில், ஆடி மாத கடைசி வெள்ளிக்கிழமையையொட்டி சிறப்பு பூஜைகள் நடந்தன. பெரும்பாலான கோவில்களில் பக்தர்கள் அனுமதிக்கப்படவில்லை -நிருபர் குழு-.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X