கோர்ட் செய்தி

தமிழ்நாடு

'விதிகளை பின்பற்றாமல் அண்ணாமலை பல்கலை ச ட்டப் படிப்பு வழங்க முடியாது'

Added : ஆக 13, 2021
Share
Advertisement
சென்னை:'இந்திய பார் கவுன்சில் விதிகளை பின்பற்றாமல், அண்ணாமலை பல்கலை சட்டப் படிப்பை வழங்க முடியாது' என, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.அண்ணாமலை பல்கலை, தொலைதுார கல்வி வாயிலாக, மூன்று ஆண்டு மற்றும் இரண்டு ஆண்டு சட்டப் படிப்புகளை நடத்த தடை விதிக்கக் கோரி, வழக்கறிஞர் ராம்குமார் ஆதித்தன், சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.இந்த வழக்கை விசாரித்த

சென்னை:'இந்திய பார் கவுன்சில் விதிகளை பின்பற்றாமல், அண்ணாமலை பல்கலை சட்டப் படிப்பை வழங்க முடியாது' என, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

அண்ணாமலை பல்கலை, தொலைதுார கல்வி வாயிலாக, மூன்று ஆண்டு மற்றும் இரண்டு ஆண்டு சட்டப் படிப்புகளை நடத்த தடை விதிக்கக் கோரி, வழக்கறிஞர் ராம்குமார் ஆதித்தன், சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.இந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், தொலைதுார கல்வி வாயிலாக சட்டப் படிப்பை வழங்க, அண்ணாமலை பல்கலைக்கு, இடைக்கால தடை விதித்தது.

இந்த வழக்கை, தலைமை நீதிபதி சஞ்சீப் பானர்ஜி தலைமையிலான அமர்வு விசாரித்தது. விசாரணையின் போது, 'இந்திய பார் கவுன்சில் அங்கீகாரம் இல்லாமல், தொலைதுார கல்வி வாயிலாக சட்டப் படிப்பு நடத்தப்படுகிறது' என, மனுதாரர் தரப்பில் குற்றம் சாட்டப் பட்டது. 'தொலைதுார கல்வியில், சட்டப் படிப்புக்கான வகுப்புகளை நடத்த, அண்ணாமலை பல்கலைக்கு உரிமையோ, அதிகாரமோ இல்லை' என, இந்திய பார் கவுன்சில் தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டது.

'தொலைதுார கல்வி வாயிலாக, சட்டப் படிப்பை வழங்க, அண்ணாமலை பல்கலைக்கு, எந்த அனுமதியும் வழங்கப்படவில்லை' என, பல்கலை மானியக் குழு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இந்த வழக்கில் தலைமை நீதிபதி அடங்கிய அமர்வு நேற்று பிறப்பித்த உத்தரவு:இந்திய பார் கவுன்சில் விதிகளை பின்பற்றாமல், அண்ணாமலை பல்கலை சட்டப் படிப்புகளை நடத்த முடியாது. இந்த படிப்புகளுக்கு புதிதாக மாணவர்களை சேர்க்கக்கூடாது.

ஏற்கனவே சேர்க்கப்பட்ட மாணவர்களை அங்கீகரிக்கப்பட்ட கல்லுாரிகளில் சேர்க்க வேண்டும்.சட்ட படிப்புகளை வழங்கும் போது, அனைத்து பல்கலையும், இந்திய பார் கவுன்சில் விதிகளை பின்பற்ற வேண்டும்; வழக்கு முடித்து வைக்கப்படுகிறது.இவ்வாறு உத்தரவில் கூறப்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X