அரசியல் செய்தி

தமிழ்நாடு

மதுரை, கோவை, ஓசூருக்கு பெருநகர் வளர்ச்சி குழுமம்

Added : ஆக 13, 2021
Share
Advertisement
சென்னை:குடிசை மாற்று வாரிய திட்டங்களுக்கு 3,954 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. * நிலையான நகர மயமாக்கலை உறுதி செய்வதுடன், அனைத்து மக்களுக்கும் ஏற்ற வீட்டுவசதி வழங்குவது அரசின் குறிக்கோள். இதற்காக, 1961 வீட்டுவசதி வாரிய சட்டம்; 1971 குடிசை மாற்று வாரிய சட்டம்; 1971 நகர் மற்றும் ஊரமைப்பு சட்டம்; 1994 அடுக்குமாடி குடியிருப்பு உரிமையாளர்கள் சட்டம் உள்ளிட்ட பழைய சட்டங்கள் மறு ஆய்வு

சென்னை:குடிசை மாற்று வாரிய திட்டங்களுக்கு 3,954 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.

* நிலையான நகர மயமாக்கலை உறுதி செய்வதுடன், அனைத்து மக்களுக்கும் ஏற்ற வீட்டுவசதி வழங்குவது அரசின் குறிக்கோள். இதற்காக, 1961 வீட்டுவசதி வாரிய சட்டம்; 1971 குடிசை மாற்று வாரிய சட்டம்; 1971 நகர் மற்றும் ஊரமைப்பு சட்டம்; 1994 அடுக்குமாடி குடியிருப்பு உரிமையாளர்கள் சட்டம் உள்ளிட்ட பழைய சட்டங்கள் மறு ஆய்வு செய்யப்படும்

* தமிழகத்தில் தற்போது 7 சதவீதமாக உள்ள, 'மாஸ்டர் பிளான்' எனப்படும் முழுமை திட்டம், 22 சதவீதமாக உயர்த்தப்படும்

* மதுரை, கோவை - திருப்பூர், ஓசூர் பகுதிகளுக்கு பெருநகர் வளர்ச்சி குழுமங்கள் ஏற்படுத்தப்படும்

* நகர்ப்புற ஏழை மக்களுக்கு 10 ஆண்டுகளில் 9.53 லட்சம் குடியிருப்புகள் தேவைப்படும். இதற்காக, குடிசை மாற்று வாரிய திட்டங்களுக்காக 3,954 கோடி ரூபாய் ஒதுக்கப் படுகிறது

* நீர் நிலைகள் உள்ளிட்ட ஆட்சேபகரமான புறம்போக்கு நிலங்களில் வசிக்கும் மக்களை, நியாயமான முறையில் மறுகுடியமர்த்த புதிய கொள்கை வகுக்கப்படும்

* இரண்டாவது தமிழ்நாடு வீட்டு வசதித் துறையை வலுவூட்டும் திட்டம், உலக வங்கி நிதியுதவியுடன் விரைவில் மேற்கொள்ளப்படும்

* வீட்டுவசதி துறையில், உலக வங்கி திட்டங்களுக்கு 320 கோடி ரூபாய்; ஆசிய வளர்ச்சி வங்கி திட்டங்களுக்கு 171 கோடி ரூபாயும் ஒதுக்கப்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X