சிமென்ட் தட்டுப்பாடு : பயனாளிகள் பாதிப்பு

Added : ஆக 13, 2021
Share
Advertisement
ஆர்.எஸ்.மங்கலம்-ஆர்.எஸ்.மங்கலம் வட்டாரத்தில், அம்மா சிமென்ட் தட்டுப்பாட்டால், அரசு வீடு கட்டும் பயனாளிகள் பாதிப்படைந்துள்ளனர்.ஆர்.எஸ்.மங்கலம் வட்டாரத்தில், கிராம பகுதி ஏழை குடும்பத்தினருக்கு, தமிழக அரசின் பசுமை வீடு, பிரதம மந்திரியின் வீடு கட்டும் திட்டத்தின் மூலம் அரசு வீடுகள் ஒதுக்கீடு செய்யப்பட்டு பணிகள் நடைபெற்று வருகின்றன. ஆர்.எஸ்.மங்கலம் வட்டாரத்தில் 50க்கும்

ஆர்.எஸ்.மங்கலம்-ஆர்.எஸ்.மங்கலம் வட்டாரத்தில், அம்மா சிமென்ட் தட்டுப்பாட்டால், அரசு வீடு கட்டும் பயனாளிகள் பாதிப்படைந்துள்ளனர்.

ஆர்.எஸ்.மங்கலம் வட்டாரத்தில், கிராம பகுதி ஏழை குடும்பத்தினருக்கு, தமிழக அரசின் பசுமை வீடு, பிரதம மந்திரியின் வீடு கட்டும் திட்டத்தின் மூலம் அரசு வீடுகள் ஒதுக்கீடு செய்யப்பட்டு பணிகள் நடைபெற்று வருகின்றன. ஆர்.எஸ்.மங்கலம் வட்டாரத்தில் 50க்கும் மேற்பட்ட வீடுகள், அரசிடம் நிதி பெற்று கட்டப்பட்டு வந்த நிலையில், பெரும்பாலான வீடுகள் பாதி முடிவடைந்த நிலையில், அரசு வழங்கும் அம்மா சிமென்ட் கிடைக்காமல், கட்டுமான பணிகள் கிடப்பில் போடப்பட்டுள்ளன.ஆர்.எஸ். மங்கலம் வட்டாரத்தில், ஆய்வு மேற்கொண்ட கலெக்டர் சந்திரகலாவிடம், அரசு நிதி பெற்று வீடு கட்டி வரும் பயனாளிகள் சிமென்ட் தட்டுப்பாட்டால் பணிகள் பாதிப்படைந்துள்ளதாக புகார் தெரிவித்தனர். இதற்கு மாவட்ட கலெக்டர் சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளிடம், பயனாளிகளுக்கு தட்டுப்பாடின்றி சிமென்ட் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்தார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X