பொது செய்தி

தமிழ்நாடு

ஆர்.எஸ்.மங்கலத்தில் 94 மெட்ரிக் டன் விதை

Added : ஆக 13, 2021
Share
Advertisement
ஆர்.எஸ்.மங்கலம்-ஆர்.எஸ்.மங்கலம் வட்டாரத்தில் 94 மெட்ரிக் டன் விதை நெல் இருப்பு உள்ளதாக வேளாண்மை அதிகாரிகள் தெரிவித்தனர்.ஆர்.எஸ்.மங்கலம் வட்டாரத்தில், செப்டம்பர், அக்டோபரில் மானாவாரியாக நெல் விதைப்பு செய்யப்படுகிறது. ஆண்டு தோறும் 20 ஆயிரத்து 426 எக்டேரில் நெல் சாகுபடி செய்யப்படுகிறது. இந்த நிலையில் நடப்பு ஆண்டில் விவசாயிகள் நெல் விதைப்பு செய்வதற்காக 94 மெட்ரிக் டன் , நெல்

ஆர்.எஸ்.மங்கலம்-ஆர்.எஸ்.மங்கலம் வட்டாரத்தில் 94 மெட்ரிக் டன் விதை நெல் இருப்பு உள்ளதாக வேளாண்மை அதிகாரிகள் தெரிவித்தனர்.

ஆர்.எஸ்.மங்கலம் வட்டாரத்தில், செப்டம்பர், அக்டோபரில் மானாவாரியாக நெல் விதைப்பு செய்யப்படுகிறது. ஆண்டு தோறும் 20 ஆயிரத்து 426 எக்டேரில் நெல் சாகுபடி செய்யப்படுகிறது. இந்த நிலையில் நடப்பு ஆண்டில் விவசாயிகள் நெல் விதைப்பு செய்வதற்காக 94 மெட்ரிக் டன் , நெல் விதைகள், ஆர்.எஸ்.மங்கலம் வேளாண்மை விரிவாக்க மையத்தில் இருப்பு வைக்கப்பட்டுள்ளன. ஆர்.எஸ்.மங்கலம் வட்டாரத்தில், அதிக அளவில் விவசாயிகள் விதைப்பு செய்யப்படும், என்.எல்.ஆர்., டி.கே.எம்.13., பி.பி.டி., ஆர்.என்.ஆர்., உள்ளிட்ட நெல் ரகங்கள் அதிக அளவில் இருப்பு வைக்கப்பட்டுள்ளன. ஆர்.என்.ஆர்., டி.கே.எம். 13., போன்ற நெல் விதைகள் 50 சதவீத மானியத்திலும், மற்ற விதைகள் கிலோவிற்கு ரூ 10 மானியத்திலும், வழங்கப்படுகின்றன. எனவே விவசாயிகள் ஆர்.எஸ்.மங்கலம் வேளாண்மை விரிவாக்க மையத்தை அணுகி மானிய விலையில், விதை நெல் பெற்றுக்கொள்ளுமாறு ஆர்.எஸ்.மங்கலம் வேளாண்மை உதவி இயக்குனர் ராஜலட்சுமி தெரிவித்தார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X