தென்னையில் வெள்ளை ஈ வேளாண் துறை அறிவுரை| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

தென்னையில் 'வெள்ளை ஈ' வேளாண் துறை அறிவுரை

Added : ஆக 13, 2021
Share
பெ.நா.பாளையம்:தென்னையில் ரூகோஸ் சுருள் வெள்ளை ஈ கட்டுப்படுத்த மேற்கொள்ளப்பட வேண்டிய தடுப்பு நடவடிக்கைகள் குறித்து, பெரியநாயக்கன்பாளையம் வேளாண்துறை, விவசாயிகளுக்கு அறிவுரை வழங்கியுள்ளது.தென்னையில் வெள்ளை ஈக்கள், இலைகளின் அடிப்பரப்பில் வட்ட அல்லது சுருள் வடிவில் முட்டையிடுகின்றன. முட்டையிலிருந்து வெளிப்படும் குஞ்சுகள் சாறு உறிஞ்சி, 20 நாட்களில், முழு வளர்ச்சி

பெ.நா.பாளையம்:தென்னையில் ரூகோஸ் சுருள் வெள்ளை ஈ கட்டுப்படுத்த மேற்கொள்ளப்பட வேண்டிய தடுப்பு நடவடிக்கைகள் குறித்து, பெரியநாயக்கன்பாளையம் வேளாண்துறை, விவசாயிகளுக்கு அறிவுரை வழங்கியுள்ளது.தென்னையில் வெள்ளை ஈக்கள், இலைகளின் அடிப்பரப்பில் வட்ட அல்லது சுருள் வடிவில் முட்டையிடுகின்றன. முட்டையிலிருந்து வெளிப்படும் குஞ்சுகள் சாறு உறிஞ்சி, 20 நாட்களில், முழு வளர்ச்சி அடைந்து ஈக்களாக மாறி, காற்றின் திசையில் பரவி, அடுத்தடுத்த தோட்டங்களில் உள்ள தென்னை மரங்களில் பாதிப்பை ஏற்படுத்துகின்றன. இது கூட்டம், கூட்டமாக தென்னை ஓலைகளின் அடியில் காணப்படும். இந்த ஈக்கள் வெளிப்படுத்தும் பசை போன்ற திரவம், கீழே உள்ள இலைகளின் மீது படர்ந்து, கரும்பூஞ்சாணம் வளர ஏதுவாகிறது. இதனால், இலையிலுள்ள பச்சையம் செயலிழந்து, மகசூல் குறையும் வாய்ப்பு உள்ளது.இப்பூச்சியை கட்டுப்படுத்த, ஒரு லிட்டர் நீருக்கு வேப்ப எண்ணெய், 30 மி.லி., அல்லது அசாடிராக்டின் ஒரு சதம் மருந்தை, ஒட்டும் திரவத்துடன் கலந்து, தென்னை ஓலையின் அடிப்புறம் தெளிக்க வேண்டும். மஞ்சள் நிற ஒட்டு பொறிகள் ஏக்கருக்கு, 20 எண்ணிக்கையில், 5 முதல், 6 அடி உயரத்தில் வைத்து பூச்சிகளை கட்டுப்படுத்தலாம்.கிரைசோபிட் இரை விழுங்கிகள், இந்த பூச்சிகளின் வளர்ச்சி நிலையை நன்றாக உட்கொள்வதால், இந்நோய் தாக்கப்பட்ட தோட்டங்களில், ஏக்கருக்கு ஆயிரம் என்ற எண்ணிக்கையில் விடலாம். கரும்பூஞ்சாணத்தை நிவர்த்தி செய்ய, மைதா மாவு கரைசலை, ஒரு லிட்டர் நீருக்கு, 25 கிராம் கரைத்து, ஓலைகளின் மேல் நன்கு படுமாறு தெளிக்கலாம். பூச்சிகளின் நடமாட்டத்தை கண்காணித்து, உடனடியாக பெரியநாயக்கன்பாளையம் வேளாண் துறை அலுவலகத்தில் தகவல் தெரிவித்து ஆலோசனை பெறலாம் என, வேளாண் உதவி இயக்குனர் நிர்மலா தெரிவித்தார்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X