தமிழ்நாடு

அதிருப்தி : ரேஷன் கடைகளில் ஏதாவது ஒரு பொருள் இல்லை என அலைக்கழிப்பு; பொது மக்கள் அதிருப்தி

Added : ஆக 13, 2021 | கருத்துகள் (1)
Share
Advertisement
ராமநாதபுரம்-மாவட்டத்தில் ரேஷன் கடைகளில் பாமாயில் இல்லை, பருப்பு இல்லை என ஏதாவது ஒருபொருள் வழங்காமல் அலைக்கழிப்பதாக மக்கள் தெரிவிக்கின்றனர்.ராமநாதபுரம் மாவட்டத்தில் 3.80 லட்சம் ரேஷன் கார்டுகள் உள்ளன. மாதந்தோறும் சர்க்கரை, அரிசி, பருப்பு, பாமாயில், கோதுமை வழங்கப்படுகிறது. இம்மாதத்திற்குரிய பாமாயில் பல ரேஷன் கடைகளுக்கு இதுவரை வரவில்லை. இதனை வாங்க மக்கள் தினமும்
அதிருப்தி : ரேஷன் கடைகளில் ஏதாவது ஒரு பொருள் இல்லை என அலைக்கழிப்பு; பொது மக்கள் அதிருப்தி

ராமநாதபுரம்-மாவட்டத்தில் ரேஷன் கடைகளில் பாமாயில் இல்லை, பருப்பு இல்லை என ஏதாவது ஒருபொருள் வழங்காமல் அலைக்கழிப்பதாக மக்கள் தெரிவிக்கின்றனர்.

ராமநாதபுரம் மாவட்டத்தில் 3.80 லட்சம் ரேஷன் கார்டுகள் உள்ளன. மாதந்தோறும் சர்க்கரை, அரிசி, பருப்பு, பாமாயில், கோதுமை வழங்கப்படுகிறது. இம்மாதத்திற்குரிய பாமாயில் பல ரேஷன் கடைகளுக்கு இதுவரை வரவில்லை. இதனை வாங்க மக்கள் தினமும் கடைக்கு அலைகின்றனர். ஒவ்வொரு மாதமும் பருப்பு, பாமாயில் சரக்கு இல்லை எனக்கூறுவதால் மக்கள் அதிருப்தியில் உள்ளனர்.

ரேஷன்கடை விற்பனையாளர்கள் கூறுகையில்,‛ கடையில் இருப்புள்ளவரை பாமாயில் பாக்கெட் கொடுத்துள்ளோம். தற்போது இருப்பு இல்லை என்றால் கார்டுதாரர்கள் எங்களுடன் வாக்குவாதம் செய்கின்றனர். இதுதொடர்பாக அதிகாரிகளிடம் தெரிவித்துள்ளோம். நேற்று தான் பாமாயில் வந்துள்ளது. அவற்றை தாலுகா வாரியாக கடைகளுக்கு அனுப்பும் பணி நடக்கிறது. ஒரிரு நாட்களில் பாமாயில் வழங்கப்படும். இப்பிரச்னையை போக்க மாதந்தோறும் பொருட்களை தொய்வின்றி ரேஷன்கடைகளுக்கு அனுப்ப அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்,'என்றனர்.--------------

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
duruvasar - indraprastham,இந்தியா
14-ஆக-202111:26:32 IST Report Abuse
duruvasar மோடியின் தமிழின துரோகம் தொடர்கிறது. அம்பேத்காரின் அமைதிபடை களம் இறங்கி தமிழர் அடிமை விலங்கை உடைக்கும் நாள் வெகு தொலைவில் இல்லை.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X