கோர்ட் செய்தி

தமிழ்நாடு

காட்டில் வலம் வரும் 'ரிவால்டோ' ஐகோர்ட்டில் வனத்துறை அறிக்கை

Added : ஆக 13, 2021
Share
Advertisement
சென்னை:'காட்டுக்குள் விடப்பட்ட, 'ரிவால்டோ' யானை, ஆரோக்கியமாகவும், மகிழ்ச்சியாகவும் காட்டு யானையாகவே வலம் வருகிறது' என, சென்னை உயர் நீதிமன்றத்தில், தமிழக வனத்துறை தெரிவித்துள்ளது.இந்திய விலங்குகள் உரிமை மற்றும் கல்வி மையம் என்ற அமைப்பின் நிறுவன அறங்காவலர் முரளிதரன், சென்னை உயர் நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல் செய்தார்.அதில் கூறப்பட்டுள்ளதாவது:அனாதையாக

சென்னை:'காட்டுக்குள் விடப்பட்ட, 'ரிவால்டோ' யானை, ஆரோக்கியமாகவும், மகிழ்ச்சியாகவும் காட்டு யானையாகவே வலம் வருகிறது' என, சென்னை உயர் நீதிமன்றத்தில், தமிழக வனத்துறை தெரிவித்துள்ளது.

இந்திய விலங்குகள் உரிமை மற்றும் கல்வி மையம் என்ற அமைப்பின் நிறுவன அறங்காவலர் முரளிதரன், சென்னை உயர் நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல் செய்தார்.அதில் கூறப்பட்டுள்ளதாவது:

அனாதையாக சுற்றி வந்த ரிவால்டோ யானை, 10 ஆண்டுகளுக்கும் மேலாக மனிதர்களுடன் நெருங்கி பழகி உள்ளது.காட்டில் 25 கிலோ மீட்டர் துாரத்தில் விட்டும், அடுத்த நாளே திரும்பி வந்து விட்டது. யானையை மீண்டும் வனத்தில் விடும்போது, அதன் உயிருக்கு ஆபத்து உள்ளது.


அறிக்கை தாக்கல்


அந்த யானையை மீண்டும் காட்டில் விடாமல், திருச்சி எம்.ஆர்.பாளையம் யானைகள் முகாமிற்கு கொண்டு செல்ல உத்தரவிட வேண்டும்.இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.இந்த மனு, தலைமை நீதிபதி சஞ்சீப் பானர்ஜி மற்றும் நீதிபதி ஆதிகேசவலு அடங்கிய அமர்வு முன், விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழக வனத்துறை தரப்பில், அரசு வழக்கறிஞர் முத்துகுமார் அறிக்கை தாக்கல் செய்தார்.அதில் கூறப்பட்டு உள்ளதாவது:

ரிவால்டோ யானையை காட்டுக்கு அனுப்பும் முதல் முயற்சி தோல்வி அடைந்தது. இரண்டாவது முயற்சியாக காட்டுக்குள் விடப்பட்டுள்ளது. தற்போது வரை யானை, காட்டில் ஆரோக்கியமாக இருக்கிறது. நன்றாக உணவு உட்கொள்கிறது.முதுமலை காட்டில், 'ரேடியோ காலர்' தொழில்நுட்பம் பயன்படுத்தி, யானைகளின் நடமாட்டம் குறித்து கண்காணிக்கப்பட்டு வருகிறது.


வழக்கு தள்ளிவைப்பு

ரிவால்டோ யானை, நாள் ஒன்றுக்கு 40 - 50 கி.மீ., வரை நடந்து செல்கிறது. அதன் செயல்கள் அனைத்தும் காட்டு யானையை போன்று உள்ளன. காட்டுக்குள் விட்டு 10 நாட்கள் கடந்த பின்னும், ஆரோக்கியமாகவும், மகிழ்ச்சியாகவும், காட்டு யானையை போலும் வலம் வருகிறது. அதன் நடமாட்டத்தை வனத்துறை அதிகாரிகள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

இதை பதிவு செய்த நீதிபதிகள், 'ரிவால்டோ யானையால் தொடர்ந்து வனப்பகுதியில் வசிக்க முடிகிறதா என்பதை தெரிந்து கொள்ள வேண்டும்' எனக்கூறி, வழக்கை மூன்று வாரங்களுக்கு தள்ளிவைத்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X