பொது செய்தி

தமிழ்நாடு

லாரியில் ஓவர் லோடு; ரூ.39 ஆயிரம் அபராதம்

Added : ஆக 13, 2021
Share
Advertisement
கோவில்பாளையம்:விதிமீறி கூடுதலாக லோடு ஏற்றி விபத்து ஏற்படுத்தும் லாரிகள் மீது நடவடிக்கை இல்லை என போலீசாரிடம் புகார் தெரிவிக்கப்பட்டது.கோவை மாவட்ட டிப்பர் லாரி உரிமையாளர் சங்கத்தை சேர்ந்த 50 பேர், நேற்று கோவில்பாளையம் போலீஸ் ஸ்டேஷன் சென்று, இன்ஸ்பெக்டர் சிவக்குமாரிடம், 'கடந்த மாதம் போலீஸ் எஸ்.பி., ஓவர் லோடு ஏற்றி வரும் லாரிகளால் அதிக விபத்தும், உயிர் சேதமும்

கோவில்பாளையம்:விதிமீறி கூடுதலாக லோடு ஏற்றி விபத்து ஏற்படுத்தும் லாரிகள் மீது நடவடிக்கை இல்லை என போலீசாரிடம் புகார் தெரிவிக்கப்பட்டது.கோவை மாவட்ட டிப்பர் லாரி உரிமையாளர் சங்கத்தை சேர்ந்த 50 பேர், நேற்று கோவில்பாளையம் போலீஸ் ஸ்டேஷன் சென்று, இன்ஸ்பெக்டர் சிவக்குமாரிடம், 'கடந்த மாதம் போலீஸ் எஸ்.பி., ஓவர் லோடு ஏற்றி வரும் லாரிகளால் அதிக விபத்தும், உயிர் சேதமும் ஏற்படுகிறது. பாதை சேதமாகிறது. எனவே, சட்டப்படி அனுமதிக்கப்பட்ட பாரம் மட்டும் ஏற்றும் படி அறிவுறுத்தினார். இதையடுத்து, எங்கள் சங்கம் சார்பில், 6 வீல் லாரிகளில் 18.5 டன்னும், 10 வீல் லாரியில் 25 டன் மட்டும் ஏற்றி செல்கின்றோம். ஆனால், திருப்பூர் மாவட்டம் மற்றும் காரமடையை சேர்ந்த சில லாரிகள் கூடுதலாக பாரம் ஏற்றி வருகின்றனர். இதுகுறித்து பலமுறை தகவல் தெரிவித்தும் நடவடிக்கை இல்லை' என புகார் தெரிவித்தனர்.இன்ஸ்பெக்டர் சிவக்குமார் பதிலளிக்கையில், ''ஓவர் லோடு லாரி குறித்து தகவல் அளித்தால், நிச்சயம் அந்த லாரி பறிமுதல் செய்யப்படும்,'' என்றார்.இந்நிலையில், அதிகளவில் பாரம் ஏற்றி வந்த லாரியை, டிப்பர் லாரி சங்கத்தினர் பிடித்து போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார், லாரியை ஸ்டேஷனுக்கு கொண்டு சென்றனர். அங்கு 39 ஆயிரத்து, 700 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது. அபராதம் செலுத்திய பின் லாரி விடுவிக்கப்படும் என, போலீசார் தெரிவித்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X