சம்பவம் செய்தி

தமிழ்நாடு

கஞ்சா போதையில் தாக்குதல் சிறுவன் உட்பட 6 பேர் கைது

Added : ஆக 13, 2021
Share
Advertisement
எண்ணுார்: கஞ்சா போதையில், பெட்ரோல் பங்க் ஊழியர்களை, சரமாரியாக வெட்டிய சிறுவன் உட்பட ஆறு பேரை, போலீசார் கைது செய்தனர்.சென்னை, எர்ணாவூர், முல்லை நகர் சந்திப்பில், தனியார் பெட்ரோல் பங்க் செயல்படுகிறது. இங்கு, எர்ணாவூர், ஆல் இந்தியா ரேடியோ நகரைச் சேர்ந்த தினேஷ், 21; பாலாஜி, 20, உள்ளிட்ட, பத்துக்கும் மேற்பட்டோர் பணியாற்றுகின்றனர். நேற்று முன்தினம் இரவு, கஞ்சா போதையில்

எண்ணுார்: கஞ்சா போதையில், பெட்ரோல் பங்க் ஊழியர்களை, சரமாரியாக வெட்டிய சிறுவன் உட்பட ஆறு பேரை, போலீசார் கைது செய்தனர்.

சென்னை, எர்ணாவூர், முல்லை நகர் சந்திப்பில், தனியார் பெட்ரோல் பங்க் செயல்படுகிறது. இங்கு, எர்ணாவூர், ஆல் இந்தியா ரேடியோ நகரைச் சேர்ந்த தினேஷ், 21; பாலாஜி, 20, உள்ளிட்ட, பத்துக்கும் மேற்பட்டோர் பணியாற்றுகின்றனர். நேற்று முன்தினம் இரவு, கஞ்சா போதையில் பங்கிற்குள் நுழைந்த வாலிபர்கள், பெட்ரோல் பங்க் ஊழியர்களை சரமாரியாக தாக்கினர்.

பின், மறைத்து வைத்திருந்த பட்டாக்கத்தியால் வெட்டி விட்டு, அங்கிருந்து தப்பினர்.இதில், தினேஷ், பாலாஜி ஆகியோருக்கு வெட்டுகாயம் ஏற்பட்டது; தினகரன் என்பவர் காயமடைந்தனர். இந்த காட்சிகள் அனைத்தும், பங்கில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவாகியுள்ளன.இது குறித்து, எண்ணுார் போலீசார் வழக்கு பதிவு செய்து, சம்பவத்தில் தொடர்புடைய, எர்ணாவூரைச் சேர்ந்த முரளி, 24; ராஜ்குமார், 18; அஜய், 19; அசேன், 19; மணிமாறன், 19 மற்றும் 17 வயதுடைய என, ஆறு பேரை கைது செய்தனர்.

இந்த கும்பல், சரக்கு லாரியை ஓட்டி வரும் டிரைவர்களிடம் தகராறு செய்ததை, பங்க் ஊழியர்கள் தட்டிக்கேட்டதால், அவர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டதாக, முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X