சம்பவம் செய்தி

தமிழ்நாடு

நடிகர் காளிதாஸ் மறைவு

Added : ஆக 13, 2021 | கருத்துகள் (1)
Share
Advertisement
சென்னை:பிரபல காமெடி நடிகர்காளிதாஸ், 65, உடல் நலக்குறைவால் காலமானார்.பழம் பெரும் நாடக நடிகர் விஸ்வத்தின் மகன் வி.காளிதாஸ், 65. செய்தி வாசிப்பாளர் ஷோபனா ரவி, நடிகை சொர்ணமால்யா ஆகியோரின் உறவினரான இவர், நிறைய படங்களில், வடிவேலுவுடன் இணைந்து காமெடியில் அசத்தியுள்ளார்.சின்னத்திரையில், 'மாயா மாரீசன்' என்ற தொடரில், மாயாவியாக நடித்தார். 'டப்பிங்' கலைஞராகவும் 3,000 படங்களுக்கு

சென்னை:பிரபல காமெடி நடிகர்காளிதாஸ், 65, உடல் நலக்குறைவால் காலமானார்.

பழம் பெரும் நாடக நடிகர் விஸ்வத்தின் மகன் வி.காளிதாஸ், 65. செய்தி வாசிப்பாளர் ஷோபனா ரவி, நடிகை சொர்ணமால்யா ஆகியோரின் உறவினரான இவர், நிறைய படங்களில், வடிவேலுவுடன் இணைந்து காமெடியில் அசத்தியுள்ளார்.

சின்னத்திரையில், 'மாயா மாரீசன்' என்ற தொடரில், மாயாவியாக நடித்தார். 'டப்பிங்' கலைஞராகவும் 3,000 படங்களுக்கு மேல் பேசியுள்ளார். சினிமாவில் காமெடி மற்றும் வில்லனாகவும் நடித்துள்ளார்.போரூர் அருகே மதனந்தபுரத்தில், 'சவுத்கேப்' என்ற ஓட்டலையும் நடத்தி வந்தார். ரத்த புற்றுநோயால் பாதிக்கப்பட்டு, தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த இவர், சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் காலமானார்.

காளிதாஸ் உடல், போரூரில் உள்ள அவரது வீட்டில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டிருந்தது. திரையுலகினர், பொதுமக்கள் ஏராளமானோர் அஞ்சலி செலுத்தினர். இறுதிச்சடங்கு நேற்று நடந்தது.இவரது மனைவி வசந்தா ஏற்கனவே இறந்து விட்டார். இவருக்கு விஜய் என்ற மகனும், பார்கவி என்ற மகளும் உள்ளனர். பார்கவி சினிமாவில் இணை இயக்குனராக உள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Srinivasan Rangarajan - Tiruchengode,இந்தியா
14-ஆக-202112:38:11 IST Report Abuse
Srinivasan Rangarajan ஏனப்பா ஒரு சின்ன படம் கூட கிடைக்கலையா நாங்க அவர் யாருன்னு தெரிஞ்சுக்க பார்த்திருப்போம் ..பெயர் தெரியாமல் இருக்கலாம். கமல் உளறலை போடும் போது தேவை இல்லாமல் படமா போடுகிறீர்கள்......
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X