சம்பவம் செய்தி

தமிழ்நாடு

ஆவடியில் கள்ள நோட்டு மாற்ற முயன்றவர் கைது

Added : ஆக 13, 2021
Share
Advertisement
ஆவடி: ஆவடியில், பழ வியாபாரியிடம் 500 ரூபாய் கள்ள நோட்டை மாற்ற முயன்ற நபர், போலீசில் சிக்கினார். சென்னை ஆவடி மாநகராட்சி அலுவலகம் அருகே, புதிய ராணுவ சாலையில், அதே பகுதியை சேர்ந்த பாக்யராஜ் என்பவர் தள்ளு வண்டியில் பழ வியாபாரம் செய்கிறார். நேற்று முன்தினம் இரவு, அவரது கடைக்கு சென்ற ஒருவர் 500 ரூபாய் நோட்டு கொடுத்து பழங்கள் வாங்கினார். அது, கள்ள நோட்டாக இருக்குமோ என சந்தேகித்த
 ஆவடியில் கள்ள நோட்டு மாற்ற முயன்றவர் கைது

ஆவடி: ஆவடியில், பழ வியாபாரியிடம் 500 ரூபாய் கள்ள நோட்டை மாற்ற முயன்ற நபர், போலீசில் சிக்கினார்.

சென்னை ஆவடி மாநகராட்சி அலுவலகம் அருகே, புதிய ராணுவ சாலையில், அதே பகுதியை சேர்ந்த பாக்யராஜ் என்பவர் தள்ளு வண்டியில் பழ வியாபாரம் செய்கிறார். நேற்று முன்தினம் இரவு, அவரது கடைக்கு சென்ற ஒருவர் 500 ரூபாய் நோட்டு கொடுத்து பழங்கள் வாங்கினார். அது, கள்ள நோட்டாக இருக்குமோ என சந்தேகித்த பாக்யராஜ், அங்கு ரோந்து பணியில் இருந்த ஆவடி போலீசாரிடம் தகவல் தெரிவித்தார்.

அந்த நபர் கொடுத்தது கள்ள நோட்டு தான் என்பது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, போலீசார் அந்த நபரை பிடித்து விசாரித்ததில் அவர், பெரம்பூர் கே.சி.கார்டனை சேர்ந்த சிவா, 34, என்பது தெரிய வந்தது.அவரிடம் இருந்து பல்வேறு மதிப்புகளிலான 33 கள்ள நோட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன. இது குறித்து போலீசார் தொடர்ந்து விசாரிக்கின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X