சம்பவம் செய்தி

தமிழ்நாடு

லஞ்ச இன்ஜினியருக்கு இரண்டு ஆண்டு சிறை

Added : ஆக 13, 2021
Share
Advertisement
சென்னை:வீடு கட்டும் பணியை நிறுத்தாமல் இருப்பதற்கு 10 ஆயிரம் ரூபாய் லஞ்சம் கேட்ட மாநகராட்சி இன்ஜினியருக்கு, இரண்டு ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து, சென்னை லஞ்ச ஒழிப்பு சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.சென்னையை சேர்ந்தவர் நசீர் அகமது; கட்டட கான்ட்ராக்டர். இவர், கொளத்துார், அன்னை சத்தியா நகரில், தன் உறவினர் முகமது என்பவரது வீட்டில் முதலாவது தளம் கட்டும் பணியை 2011ல்

சென்னை:வீடு கட்டும் பணியை நிறுத்தாமல் இருப்பதற்கு 10 ஆயிரம் ரூபாய் லஞ்சம் கேட்ட மாநகராட்சி இன்ஜினியருக்கு, இரண்டு ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து, சென்னை லஞ்ச ஒழிப்பு சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னையை சேர்ந்தவர் நசீர் அகமது; கட்டட கான்ட்ராக்டர். இவர், கொளத்துார், அன்னை சத்தியா நகரில், தன் உறவினர் முகமது என்பவரது வீட்டில் முதலாவது தளம் கட்டும் பணியை 2011ல் மேற்கொண்டார்.கட்டுமான பணி நடந்த போது, சென்னை மாநகராட்சியின் நான்காவது மண்டல உதவி இன்ஜினியர் பி.சங்கரன், கட்டுமானத்தை பார்வையிட்டு, கட்டட அனுமதிக்கான ஆவணங்களை கேட்டு உள்ளார்.

ஆவணங்களை சரிபார்த்த சங்கரன், கட்டுமான பணிகளை நிறுத்த உத்தரவிட்டு, தன்னை அலுவலகத்தில் வந்து சந்திக்கும்படி, நசீர் அகமதுவிடம் கூறி உள்ளார்.அதன்படி, சங்கரனை அவரது அலுவலகத்தில் நசீர் சந்தித்தபோது, 10 ஆயிரம் ரூபாய் லஞ்சம் கேட்டுள்ளார். 'கொடுக்கவில்லை எனில், கட்டடம் இடிக்கப்படும்' என மிரட்டி உள்ளார்.

இது குறித்து, லஞ்ச ஒழிப்பு போலீசில், நசீர் புகார் அளித்தார். போலீசார் அறிவுரைப்படி, முதற்கட்டமாக 2,000 ரூபாயை நசீர் அகமது லஞ்சமாக கொடுத்துள்ளார். லஞ்சப் பணத்தை சங்கரன் வாங்கிய போது போலீசார் கைது செய்தனர்.இந்த வழக்கு விசாரணை, சென்னை லஞ்ச ஒழிப்பு சிறப்பு நீதிமன்றத்தில் நடந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி ஓம் பிரகாஷ், உதவி இன்ஜினியர் சங்கரனுக்கு, இரண்டு ஆண்டுகள் சிறை தண்டனையும், 2,000 ரூபாய் அபராதமும் விதித்து தீர்ப்பு அளித்தார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X