பொது செய்தி

தமிழ்நாடு

ரூ.335 கோடியில் 3 புதிய மேம்பாலங்கள்

Added : ஆக 13, 2021
Share
Advertisement
சென்னை: 'சென்னையில், மூன்று இடங்களில், 335 கோடி ரூபாய் செலவில், மூன்று புதிய மேம்பாலங்கள்; 'சிங்கார சென்னை 2.0' திட்டத்திற்கு 500 கோடி ரூபாய் ஒதுக்கீடு; 2,056 கோடி ரூபாய் செலவில் பாதாள சாக்கடை திட்டம்' என, தமிழக பட்ஜெட்டில், சென்னைக்கு பல்வேறு முக்கிய அறிவிப்புகள் இடம் பெற்றுள்ளன. தமிழக சட்டசபையில் நேற்று, மாநில நிதியமைச்சர் தியாகராஜன் தாக்கல் செய்த பட்ஜெட்டில், சென்னைக்கான

சென்னை: 'சென்னையில், மூன்று இடங்களில், 335 கோடி ரூபாய் செலவில், மூன்று புதிய மேம்பாலங்கள்; 'சிங்கார சென்னை 2.0' திட்டத்திற்கு 500 கோடி ரூபாய் ஒதுக்கீடு; 2,056 கோடி ரூபாய் செலவில் பாதாள சாக்கடை திட்டம்' என, தமிழக பட்ஜெட்டில், சென்னைக்கு பல்வேறு முக்கிய அறிவிப்புகள் இடம் பெற்றுள்ளன.

தமிழக சட்டசபையில் நேற்று, மாநில நிதியமைச்சர் தியாகராஜன் தாக்கல் செய்த பட்ஜெட்டில், சென்னைக்கான நிதி ஒதுக்கீடு குறித்த அறிவிப்புகள் பின்வருமாறு:  சென்னையில், அனைத்து வீடுகளுக்கும் குடிநீர் இணைப்பு வழங்கும் நோக்கில், 'சிங்கார சென்னை 2.0' திட்டம் துவங்கப்படும். இதற்கென, 500 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. கணேசபுரம் சுரங்கப்பாதை மேல், கொன்னுார் நெடுஞ்சாலை - ஸ்ட்ரான்ஸ் சாலை, தெற்கு உஸ்மான் சாலை ஆகிய இடங்களில், 335 கோடி ரூபாய் மதிப்பீட்டில் மேம்பாலங்கள் கட்டப்படும்.

ஆசிய வளர்ச்சி வங்கி உதவியுடன், கொசஸ்தலை ஆற்று படுகையில், ஒருங்கிணைந்த வெள்ளத்தடுப்பு வடிகால் அமைப்பு ஏற்படுத்தப்படும், இதற்கு, நடப்பு நிதி ஆண்டில், 87 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. சென்னை மாநகராட்சியுடன் இணைக்கப்பட்ட அனைத்து பகுதிகளுக்கும், 2,056 கோடி ரூபாய் செலவில் பாதாள சாக்கடை திட்டம் செயல்படுத்தப்படும்.

சென்னை நகர கூட்டாண்மை திட்டம், உலக வங்கி, ஆசிய உள்கட்டமைப்பு முதலீட்டு வங்கி நிதி உதவியுடன் துவங்கப்படும்.இவ்வாறு பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டு உள்ளது. கழிவு நீர் கலப்பதை தடுக்க ரூ.2,371 கோடி ஒதுக்கீடு சென்னையில் உள்ள நீர் வழிதடங்களில், கழிவு நீர் கலப்பதை தடுக்கும் திட்டம், 2,371 கோடி ரூபாய் செலவில் தீவிரமாக செயல்படுத்தப்படும்.

ஆந்திராவில் இருந்து குழாய் வழியாக, கிருஷ்ணா நீரை சென்னை நீர்த்தேக்கங்களுக்கு கொண்டு வருவதற்கான சாத்தியக்கூறு அறிக்கை தயாரிக்கப்படும். ஜப்பான் பன்னாட்டு கூட்டுறவு முகமை உதவியுடன், நாள் ஒன்றுக்கு, 40 கோடி லிட்டர் கடல் நீரை குடிநீராக்கும் திட்டம் செயல்படுத்தப்படும் என, தமிழக பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X