எம்.எல்.ஏ.,க்களுக்கு பழனிசாமி., ஆலோசனை| Dinamalar

அரசியல் செய்தி

தமிழ்நாடு

எம்.எல்.ஏ.,க்களுக்கு பழனிசாமி., ஆலோசனை

Added : ஆக 13, 2021
Share
சென்னை:அ.தி.மு.க., - எம்.எல்.ஏ.,க்கள் ஆலோசனை கூட்டம், அக்கட்சியின் தலைமை அலுவலகத்தில் நடந்தது. கூட்டத்திற்கு, கட்சியின் ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம்., இணை ஒருங்கிணைப்பாளர் பழனிசாமி., ஆகியோர் தலைமை வகித்தனர்.இருவரும், சட்டசபை பட்ஜெட் கூட்டத் தொடரில், எம்.எல்.ஏ.,க்கள் மக்கள் நலன் சார்ந்த பிரச்னைகளை எவ்வாறு அணுக வேண்டும் என்பது தொடர்பாக ஆலோசனைகள் வழங்கினர். மேலும்,

சென்னை:அ.தி.மு.க., - எம்.எல்.ஏ.,க்கள் ஆலோசனை கூட்டம், அக்கட்சியின் தலைமை அலுவலகத்தில் நடந்தது. கூட்டத்திற்கு, கட்சியின் ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம்., இணை ஒருங்கிணைப்பாளர் பழனிசாமி., ஆகியோர் தலைமை வகித்தனர்.

இருவரும், சட்டசபை பட்ஜெட் கூட்டத் தொடரில், எம்.எல்.ஏ.,க்கள் மக்கள் நலன் சார்ந்த பிரச்னைகளை எவ்வாறு அணுக வேண்டும் என்பது தொடர்பாக ஆலோசனைகள் வழங்கினர். மேலும், கூட்டத் தொடரில், மானிய கோரிக்கை விவாதத்தின் போது, எந்த விஷயங்களை பேச வேண்டும்; சபையில் மக்கள் பிரச்னைகளை எழுப்புவது, தி.மு.க.,வின் நிறைவேற்றாத வாக்குறுதிகளை எடுத்துரைப்பது குறித்தும் ஆலோசிக்கப்பட்டது.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X