பொது செய்தி

தமிழ்நாடு

உலக உடலுறுப்பு தான தினம் காவேரி மருத்துவமனை விழிப்புணர்வு

Added : ஆக 13, 2021
Share
Advertisement
சென்னை: உலக உடலுறுப்பு தானம் தினத்தையொட்டி, ஓசூரில் உள்ள காவேரி மருத்துவமனையில், ஆக., 10ம் தேதி விழிப்புணர்வு வாகன பிரசாரம் துவங்கப்பட்டது. சேலம், திருச்சி வழியாக, பெருநிறுவனங்களில் பணியாற்றும், 50 ஆயிரம் பணியாளர்களுக்கு, உடல் உறுப்பு தானம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தி உள்ளனர். இதைத்தொடர்ந்து, வாகன பிரசாரம், சென்னையில் நேற்று நிறைவடைந்தது. மேலும், காவேரி
 உலக உடலுறுப்பு தான தினம் காவேரி மருத்துவமனை விழிப்புணர்வு

சென்னை: உலக உடலுறுப்பு தானம் தினத்தையொட்டி, ஓசூரில் உள்ள காவேரி மருத்துவமனையில், ஆக., 10ம் தேதி விழிப்புணர்வு வாகன பிரசாரம் துவங்கப்பட்டது. சேலம், திருச்சி வழியாக, பெருநிறுவனங்களில் பணியாற்றும், 50 ஆயிரம் பணியாளர்களுக்கு, உடல் உறுப்பு தானம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தி உள்ளனர்.

இதைத்தொடர்ந்து, வாகன பிரசாரம், சென்னையில் நேற்று நிறைவடைந்தது. மேலும், காவேரி மருத்துவமனையில் பணியாற்றும் ஊழியர்களும், உடல் உறுப்பு தானம் குறித்த உறுதிமொழி ஏற்றனர்.இதுகுறித்து, காவேரி மருத்துவமனை கல்லீரல் உறுப்பு மாற்று சிகிச்சை துறை தலைவர் இளங்குமரன் கூறியதாவது:

தேசிய அளவில் உடல் உறுப்பு தானம் அளிக்கும் மாநிலங்களில், தமிழகம் சிறந்து விளங்குகிறது.எனினும், கொரோனா பெருந்தொற்றுக்கு பின், பின்னடைவு ஏற்பட்டுள்ளது. உயிரிழந்த ஒரு நபர் அளிக்கும் உடல் உறுப்புகள் தானத்தால், எட்டு பேருக்கு மறுவாழ்வு கிடைக்கிறது. எனவே, பல உயிர்களை காப்பாற்ற, உடல் உறுப்பு தானமளிக்க முன்வர வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X