அரசியல் செய்தி

தமிழ்நாடு

தலைவர்கள் சிலைக்கு மரியாதை முதல்வர் அறிவிப்பு

Added : ஆக 13, 2021 | கருத்துகள் (6)
Share
Advertisement
சென்னை:'நாட்டின் விடுதலைக்காக அரும்பாடுபட்ட தலைவர்கள் மற்றும் வீரர்களின் உருவச் சிலைகளுக்கு, சுதந்திர தினம் மற்றும் குடியரசு தின விழா நாட்களில், மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்படும்' என, முதல்வர் ஸ்டாலின் அறிவித்து உள்ளார்.அவரது அறிக்கை:நாட்டின் விடுதலைக்காக அரும்பாடுபட்டு, தன்னை அர்ப்பணித்து கொண்ட தலைவர்கள் மற்றும் சுதந்திரப் போராட்ட வீரர்களின் தியாகங்களை
 தலைவர்கள் சிலைக்கு மரியாதை  முதல்வர் அறிவிப்பு

சென்னை:'நாட்டின் விடுதலைக்காக அரும்பாடுபட்ட தலைவர்கள் மற்றும் வீரர்களின் உருவச் சிலைகளுக்கு, சுதந்திர தினம் மற்றும் குடியரசு தின விழா நாட்களில், மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்படும்' என, முதல்வர் ஸ்டாலின் அறிவித்து உள்ளார்.

அவரது அறிக்கை:நாட்டின் விடுதலைக்காக அரும்பாடுபட்டு, தன்னை அர்ப்பணித்து கொண்ட தலைவர்கள் மற்றும் சுதந்திரப் போராட்ட வீரர்களின் தியாகங்களை பாராட்டி, பெருமைப்படுத்தும் வகையில், அரசு சார்பில் அவர்கள் சிலைகள், நகரின் முக்கிய பகுதிகளில் அமைக்கப்பட்டுள்ளன.

நம் நாடு விடுதலை பெற, தன்னை அர்ப்பணித்ததோடு, தமது இன்னுயிரையும் தந்திட்ட பெருந்தலைவர்களுக்கு, பெருமை சேர்க்க வேண்டும். அந்த வகையில், சுதந்திர தினவிழா மற்றும் குடியரசு தின விழாவின் போது, சென்னை மற்றும் மாவட்ட தலைநகரங்களில், அவர்களின் சிலைகளுக்கு, அரசு சார்பில் மாலை அணிவித்து மரியாதை செய்யப்படும். இவ்வாறு ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.


உறுப்பு தானம்

உலக உடலுறுப்பு கொடை தினத்தையொட்டி, முதல்வர் வெளியிட்ட செய்தி:உலக உடலுறுப்பு கொடை நாளில், உடலுறுப்பு கொடை தொடர்பான தவறான கருத்துக்களை நீக்கி, நல்ல நிலையில் உள்ள உறுப்புகளை, இறப்புக்கு பின் கொடையளிக்க அனைவரையும் ஊக்குவிப்போம். நாம் எடுக்கும் ஒரு முடிவானது, பலரது வாழ்வை புரட்டிப்போட்டு பெரிய மாற்றத்தை, அவர்தம் வாழ்வில் நிகழ்த்திக் காட்டும்.இவ்வாறு, அவர் தெரிவித்துள்ளார்.ஸ்டாலின் மரியாதைதமிழக அரசின், 2021 - 22ம் ஆண்டுக்கான, திருத்திய நிதி நிலை அறிக்கை, நேற்று சட்டசபையில் தாக்கல் செய்யப்பட்டது. இது, தி.மு.க., அரசு பொறுப்பேற்ற பின் தாக்கல் செய்யப்பட்ட முதல் பட்ஜெட்.அதையொட்டி, முதல்வர் ஸ்டாலின் மற்றும் அமைச்சர்கள், மெரினா கடற்கரையில் உள்ள அண்ணாதுரை, கருணாநிதி நினைவிடத்திற்கு சென்று, மலர் துாவி மரியாதை செலுத்தினர்.

Advertisement


வாசகர் கருத்து (6)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Thiagarajan Kodandaraman - Madurai,இந்தியா
14-ஆக-202116:35:05 IST Report Abuse
Thiagarajan Kodandaraman அதை நாசூக்காக சுதந்திர தலைவருக்கு மரியாதையை போர்வையில் உங்க தலைவர் சமாதிக்கு சென்று வந்தாச்சு ..இந்த திறமை உங்க குடும்பத்துக்கு மட்டுமே வரும் ...தமிழனை பரம்பரை அடிமை ஆக்கி இப்போது ரெண்டே முக்கா லச்சம் கோடி வேற ஒரு ஒரு குடும்பத்தையும் ஆக்கியாச்சு ..சூப்பர் அப்பு
Rate this:
Cancel
sathish - melbourne,ஆஸ்திரேலியா
14-ஆக-202113:59:49 IST Report Abuse
sathish நாட்டின் தலைவர்களில் உங்க தலைவர் கருணாநிதியும் உண்டா?
Rate this:
Cancel
Dharma - Madurai,இந்தியா
14-ஆக-202112:54:38 IST Report Abuse
Dharma //நாட்டின் விடுதலைக்காக அரும்பாடுபட்ட தலைவர்கள் மற்றும் வீரர்களின் உருவச் சிலைகளுக்கு, சுதந்திர தினம் மற்றும் குடியரசு தின விழா நாட்களில், மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்படும்' // மற்ற நாட்களில் உருவச் சிலைகளுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்படும்
Rate this:
Dharma - Madurai,இந்தியா
14-ஆக-202113:39:11 IST Report Abuse
Dharmaமற்ற நாட்களில் பெரியார் அண்ணாதுரை கருணாநிதி உருவச் சிலைகளுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்படும்...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X