தலைவர்கள் சிலைக்கு மரியாதை முதல்வர் அறிவிப்பு| Dinamalar

அரசியல் செய்தி

தமிழ்நாடு

தலைவர்கள் சிலைக்கு மரியாதை முதல்வர் அறிவிப்பு

Added : ஆக 13, 2021 | கருத்துகள் (6)
Share
சென்னை:'நாட்டின் விடுதலைக்காக அரும்பாடுபட்ட தலைவர்கள் மற்றும் வீரர்களின் உருவச் சிலைகளுக்கு, சுதந்திர தினம் மற்றும் குடியரசு தின விழா நாட்களில், மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்படும்' என, முதல்வர் ஸ்டாலின் அறிவித்து உள்ளார்.அவரது அறிக்கை:நாட்டின் விடுதலைக்காக அரும்பாடுபட்டு, தன்னை அர்ப்பணித்து கொண்ட தலைவர்கள் மற்றும் சுதந்திரப் போராட்ட வீரர்களின் தியாகங்களை
 தலைவர்கள் சிலைக்கு மரியாதை  முதல்வர் அறிவிப்பு

சென்னை:'நாட்டின் விடுதலைக்காக அரும்பாடுபட்ட தலைவர்கள் மற்றும் வீரர்களின் உருவச் சிலைகளுக்கு, சுதந்திர தினம் மற்றும் குடியரசு தின விழா நாட்களில், மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்படும்' என, முதல்வர் ஸ்டாலின் அறிவித்து உள்ளார்.

அவரது அறிக்கை:நாட்டின் விடுதலைக்காக அரும்பாடுபட்டு, தன்னை அர்ப்பணித்து கொண்ட தலைவர்கள் மற்றும் சுதந்திரப் போராட்ட வீரர்களின் தியாகங்களை பாராட்டி, பெருமைப்படுத்தும் வகையில், அரசு சார்பில் அவர்கள் சிலைகள், நகரின் முக்கிய பகுதிகளில் அமைக்கப்பட்டுள்ளன.

நம் நாடு விடுதலை பெற, தன்னை அர்ப்பணித்ததோடு, தமது இன்னுயிரையும் தந்திட்ட பெருந்தலைவர்களுக்கு, பெருமை சேர்க்க வேண்டும். அந்த வகையில், சுதந்திர தினவிழா மற்றும் குடியரசு தின விழாவின் போது, சென்னை மற்றும் மாவட்ட தலைநகரங்களில், அவர்களின் சிலைகளுக்கு, அரசு சார்பில் மாலை அணிவித்து மரியாதை செய்யப்படும். இவ்வாறு ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.


உறுப்பு தானம்

உலக உடலுறுப்பு கொடை தினத்தையொட்டி, முதல்வர் வெளியிட்ட செய்தி:உலக உடலுறுப்பு கொடை நாளில், உடலுறுப்பு கொடை தொடர்பான தவறான கருத்துக்களை நீக்கி, நல்ல நிலையில் உள்ள உறுப்புகளை, இறப்புக்கு பின் கொடையளிக்க அனைவரையும் ஊக்குவிப்போம். நாம் எடுக்கும் ஒரு முடிவானது, பலரது வாழ்வை புரட்டிப்போட்டு பெரிய மாற்றத்தை, அவர்தம் வாழ்வில் நிகழ்த்திக் காட்டும்.இவ்வாறு, அவர் தெரிவித்துள்ளார்.ஸ்டாலின் மரியாதைதமிழக அரசின், 2021 - 22ம் ஆண்டுக்கான, திருத்திய நிதி நிலை அறிக்கை, நேற்று சட்டசபையில் தாக்கல் செய்யப்பட்டது. இது, தி.மு.க., அரசு பொறுப்பேற்ற பின் தாக்கல் செய்யப்பட்ட முதல் பட்ஜெட்.அதையொட்டி, முதல்வர் ஸ்டாலின் மற்றும் அமைச்சர்கள், மெரினா கடற்கரையில் உள்ள அண்ணாதுரை, கருணாநிதி நினைவிடத்திற்கு சென்று, மலர் துாவி மரியாதை செலுத்தினர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X