அரசியல் செய்தி

தமிழ்நாடு

காங்கிரஸ், ம.தி.மு.க., வரவேற்பு ராமதாஸ் வருத்தம்; கமல் ஏமாற்றம்

Added : ஆக 13, 2021
Share
Advertisement
சென்னை:தமிழக பட்ஜெட்டை, தி.மு.க., கூட்டணி கட்சிகள் வரவேற்றும், எதிர்க்கட்சிகள் விமர்சித்தும் கருத்து தெரிவித்துள்ளன.தமிழக காங்கிரஸ் தலைவர்அழகிரி: தமிழகத்தில், 2 கோடியே 63 லட்சம் இரு சக்கர வாகன ஓட்டிகள் பயன் பெறும் வகையில், லிட்டர் பெட்ரோலுக்கு 3 ரூபாய் வரியை குறைத்ததற்காக, முதல்வரை பாராட்டுகிறேன். தமிழக அரசு, விரைவில் புதிய கல்விக் கொள்கையை அறிவிக்கும் எனக்

சென்னை:தமிழக பட்ஜெட்டை, தி.மு.க., கூட்டணி கட்சிகள் வரவேற்றும், எதிர்க்கட்சிகள் விமர்சித்தும் கருத்து தெரிவித்துள்ளன.


தமிழக காங்கிரஸ் தலைவர்அழகிரி:



தமிழகத்தில், 2 கோடியே 63 லட்சம் இரு சக்கர வாகன ஓட்டிகள் பயன் பெறும் வகையில், லிட்டர் பெட்ரோலுக்கு 3 ரூபாய் வரியை குறைத்ததற்காக, முதல்வரை பாராட்டுகிறேன். தமிழக அரசு, விரைவில் புதிய கல்விக் கொள்கையை அறிவிக்கும் எனக் கூறியதோடு, 32 ஆயிரத்து 591 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. கல்வி கற்பிக்கும் முறையில் அடிப்படை மாற்றங்கள் செய்து, ஆசிரியர்களின் கற்பிக்கும் திறனை வளர்க்க, தீவிர நடவடிக்கை எடுக்கப்படும் என அறிவித்திருப்பது, மிகுந்த வரவேற்புக்கு உரியது.


பா.ம.க., நிறுவனர் ராமதாஸ்:

வளர்ச்சிக்கு வழிவகுக்கும் வகையிலும், சுற்றுச்சூழலை பாதுகாக்கும் வகையிலும் பல திட்டங்கள் அறிவிக்கப்பட்டிருப்பது வரவேற்கத்தக்கது. தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றுவது குறித்த அறிவிப்புகள் இல்லாதது வருத்தம் அளிக்கிறது. பட்ஜெட் அறிக்கை இனிப்பு, புளிப்பு, கசப்பு போன்றவை கலந்த கலவையாக உள்ளது. தமிழக அரசு எதிர்கொண்டு வரும் நிதி நெருக்கடிகளை புரிந்து கொள்ள முடிகிறது. இதே நிலை நீடித்தால், அதை மக்களால் தாங்க முடியாது. எனவே, நிதிச் சீர்திருத்தங்களை விரைந்து மேற்கொண்டு, நிதிநிலைமையை சரி செய்ய வேண்டும்.


ம.தி.மு.க., பொதுச்செயலர் வைகோ:

மத்திய அரசின் வரி பங்கீட்டில் பாரபட்சம், ஜி.எஸ்.டி., நிலுவை தொகை வழங்காததை எதிர்கொள்ள, கூட்டாட்சி நிதி வடிவம் ஒன்றை உருவாக்க, ஆலோசனை குழு அமைக்கப்படும் என்ற அறிவிப்பின் வாயிலாக, மாநில உரிமைக் கொடியை,தி.மு.க., அரசு உயர்த்திபிடிக்கிறது. அரசு நிர்வாகத்தில் வெளிப்படைத் தன்மை, மின்னணு கொள்முதல், அனைத்து துறைகளும் முழுமையாக கணினிமயம் போன்ற அறிவிப்புகள் வாயிலாக, ஊழல் அற்ற, நேர்மையான திறன் மிகுந்த அரசு நிர்வாகத்தை, முதல்வர் உறுதி செய்திருக்கிறார்.


த.மா.கா., தலைவர் வாசன்:

தி.மு.க., அரசின் முதல் பட்ஜெட், மக்களின் எதிர்பார்ப்புக்கு ஏற்றவாறு அமையவில்லை. மக்களின் பிரச்னைகளுக்கு தீர்வு ஏற்படுத்தக்கூடிய வகையில் திட்டங்கள் முழுமை அடைய வில்லை.செலவினத்தை கட்டுப்படுத்தவோ, வருவாயை கூட்டவோ, பொருளாதாரத்தை மேம்படுத்தவோ, முக்கிய திட்டங்கள் இல்லை. டீசல் விலையை குறைக்க அறிவிப்பு வெளியிடாததால், மக்களுக்கு ஏற்பட்டுள்ள பொருளாதார சுமை குறையாது.


மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்:



தேர்தல் வாக்குறுதியில் சொல்லப்பட்டதற்கும், பட்ஜெட்டில் இடம் பெற்றதற்கும் இடையே, ஏராளமான வித்தியாசங்கள் உள்ளன. மாற்றத்திற்கான பட்ஜெட்டை எதிர்பார்த்தவர்களுக்கு, ஏமாற்றமே எஞ்சுகிறது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X