மழை வந்தால் மாற்றார் வீடுதான்; சினத்தில் சின்னத்தம்பியாபுரம் மக்கள்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

மழை வந்தால் மாற்றார் வீடுதான்; சினத்தில் சின்னத்தம்பியாபுரம் மக்கள்

Added : ஆக 14, 2021
Share
சாத்துார்,--தெருவின் நடுவில் ஒடும் கழிவு நீர், பள்ளம் மேடான ரோடு, சேதமடைந்த குடிநீர் மேல்நிலைத்தொட்டி, மழை வந்தால் மாற்றார் வீடுகளில் தஞ்சம் என சாத்துார் சின்னத்தம்பியாபுரம் மக்கள் தவிக்கின்றனர்.இப்பகுதியில் சாக்கடைகள் முறைப்படி கட்டப்படாததால் தடுப்பு சுவர்கள் இடிந்து காணப்படுகிறது .அனைத்து தெருக்களின் நடுவிலும் கழிவு நீர் ஓடுகிறது. இரு சக்கர வாகனமோ

சாத்துார்,--தெருவின் நடுவில் ஒடும் கழிவு நீர், பள்ளம் மேடான ரோடு, சேதமடைந்த குடிநீர் மேல்நிலைத்தொட்டி, மழை வந்தால் மாற்றார் வீடுகளில் தஞ்சம் என சாத்துார் சின்னத்தம்பியாபுரம் மக்கள் தவிக்கின்றனர்.இப்பகுதியில் சாக்கடைகள் முறைப்படி கட்டப்படாததால் தடுப்பு சுவர்கள் இடிந்து காணப்படுகிறது .அனைத்து தெருக்களின் நடுவிலும் கழிவு நீர் ஓடுகிறது. இரு சக்கர வாகனமோ ஆட்டோவே வர முடியாத நிலை உள்ளது. சாக்கடைகளை கிராமமக்களே சுத்தம் செய்கின்றனர். ஆண், பெண் சுகாதார வளாகங்கள் இருந்தும் மோட்டார் பழுது காரணமாக தண்ணீர் வரவில்லை. இதனால் இங்குள்ளோர் திறந்த வெளியை நாடுகின்றனர்.ஊர் பொதுக் கிணற்றில் சுவையான நீர் கிடைத்த நிலையில் பராமரிப்பின்றி போனதால் குடிநீருக்காக பொது மக்கள் அலைந்து திரியும் நிலை உள்ளது.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X