பொது செய்தி

தமிழ்நாடு

மணல் திருட்டு பகுதியில் அதிகாரி ஆய்வு: தினமலர் செய்தி எதிரொலி

Added : ஆக 14, 2021
Share
Advertisement
தளவாய்புரம்--ராஜபாளையம் அருகே நீர்வரத்து கால்வாயில் நடக்கும் மணல் திருட்டால் விவசாய நிலங்களின் கரைகள் பலவீனமாவதாக தினமலர் நாளிதழில் வெளியான செய்தி எதிரொலியாக, இதன் இடத்தை நீர்வளத் துறை பொறியாளர் ஆய்வு செய்தார்.ராஜபாளையத்திலிருந்து அயன் கொல்லங் கொண்டான் கண்மாய்க்கு அய்யனார் கோயில் ஆற்றுநீர் வரத்து கால்வாய் உள்ளது. மழை இன்றி வறண்டுள்ள ஓடையின் கரையை உடைத்து

தளவாய்புரம்--ராஜபாளையம் அருகே நீர்வரத்து கால்வாயில் நடக்கும் மணல் திருட்டால் விவசாய நிலங்களின் கரைகள் பலவீனமாவதாக தினமலர் நாளிதழில் வெளியான செய்தி எதிரொலியாக, இதன் இடத்தை நீர்வளத் துறை பொறியாளர் ஆய்வு செய்தார்.

ராஜபாளையத்திலிருந்து அயன் கொல்லங் கொண்டான் கண்மாய்க்கு அய்யனார் கோயில் ஆற்றுநீர் வரத்து கால்வாய் உள்ளது. மழை இன்றி வறண்டுள்ள ஓடையின் கரையை உடைத்து ஆற்று மணல், செங்கல் சூளைக்கு சவுடு மண் கடத்தப்பட்டு வந்தது. தினமலர் நாளிதழில் படத்துடன் செய்தி வெளியானது. இதன் எதிரொலியாக இதன் இடத்தை நீர்வளத் துறை உதவிப் பொறியாளர் சந்திரமோகன் ஆய்வு மேற்கொண்டார்.வட்டார அளவிலான கனிமங்கள் கடத்தல் தடுப்பு கண்காணிப்பு குழு மூலம் மண், மணல் கடத்தலை தடுக்கவும், பலவீனம் அடைந்துள்ள கரையை பலப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும், என விவசாயிகளிடம் உறுதி அளித்தார்.செய்தி வெளியிட்ட தினமலர் நாளிதழுக்கு பெரியகுளம் கண்மாய் பாசன விவசாயிகள் நன்றி தெரிவித்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X