அரசியல் செய்தி

தமிழ்நாடு

3 மாதங்களில் அரசு வாங்கிய கடன் ரூ.40 ஆயிரம் கோடி!

Added : ஆக 14, 2021
Share
Advertisement
சென்னை:''நடப்பு நிதியாண்டில் 92 ஆயிரத்து 482 கோடி ரூபாய் கடன் வாங்க மதிப்பிடப்பட்டுள்ளது; கடந்த மூன்று மாதங்களில் 40 ஆயிரம் கோடி ரூபாய் கடன் வாங்கப்பட்டுள்ளது,'' என, தமிழக அரசின் நிதித்துறை செயலர் கிருஷ்ணன் தெரிவித்தார்.தமிழக பட்ஜெட் தாக்கலுக்கு பின், சென்னை தலைமை செயலகத்தில் நேற்று கிருஷ்ணன் அளித்த பேட்டி:கொரோனா பரவலால் வருவாய் இழப்பு, கூடுதல் செலவு உள்ளிட்ட பல

சென்னை:''நடப்பு நிதியாண்டில் 92 ஆயிரத்து 482 கோடி ரூபாய் கடன் வாங்க மதிப்பிடப்பட்டுள்ளது; கடந்த மூன்று மாதங்களில் 40 ஆயிரம் கோடி ரூபாய் கடன் வாங்கப்பட்டுள்ளது,'' என, தமிழக அரசின் நிதித்துறை செயலர் கிருஷ்ணன் தெரிவித்தார்.

தமிழக பட்ஜெட் தாக்கலுக்கு பின், சென்னை தலைமை செயலகத்தில் நேற்று கிருஷ்ணன் அளித்த பேட்டி:கொரோனா பரவலால் வருவாய் இழப்பு, கூடுதல் செலவு உள்ளிட்ட பல நெருக்கடியில் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. செலவினத்தை குறைத்து வருவாயை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

முதியோர் உதவித்தொகை, மாற்றுத் திறனாளிகள் திட்டங்கள் போன்ற அதிக தேவை உள்ள திட்டங்களுக்கு கூடுதல் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது. தற்போது தாக்கல் செய்யப் பட்டு உள்ள பட்ஜெட் ஆறு மாதங்களுக்கானது.மூலதனத்தை அதிகரிக்க கூடுதல் நிதி ஒதுக்க முடிவு எடுக்கப்பட்டு உள்ளது. எதை செய்ய இயலும், எவ்வாறு செய்ய இயலும் என ஆராய்ந்து எடுக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் 2 கோடிக்கும் அதிகமாக இரு சக்கர வாகனங்கள் உள்ளன. அதனுடன் ஒப்பிடும் போது, டீசல் வாகனங்களின் எண்ணிக்கை குறைவு. எனவே, தற்போது டீசலுக்கு வரி குறைக்கப்படவில்லை.பெட்ரோல் மீதான வரி குறைப்பு இன்று நள்ளிரவு முதல் அமலுக்கு வருகிறது. பெட்ரோல், டீசல் விற்பனை வாயிலாக, தமிழக அரசுக்கு ஆண்டுக்கு 23 ஆயிரம் கோடி ரூபாய் வருவாய் கிடைக்கிறது. பெட்ரோல் விலை குறைக்கப்படுவதால் 1,100 கோடி ரூபாய் இழப்பு ஏற்படும்.

'டாஸ்மாக்' மது விற்பனை வாயிலாக 35 ஆயிரம் கோடி ரூபாய் வருவாய் கிடைத்துள்ளது. மது கடைகள் குறைப்பு, 'பார்'கள் மூடல் போன்ற காரணங்களால், இந்த ஆண்டுக்கு டாஸ்மாக் வாயிலாக கிடைக்கும் வருவாய் 4 - 5 சதவீதம் குறைந்துள்ளது.தமிழக அரசு, ஒட்டுமொத்த செலவினங்களுக்காக கடன் வாங்குகிறது. மூன்று மாதங்களில் 40 ஆயிரம் கோடி ரூபாய் கடன் வாங்கப்பட்டு உள்ளது.

இந்த ஆண்டு 92 ஆயிரத்து 482 கோடி ரூபாய் கடன் வாங்க மதிப்பிடப்பட்டு உள்ளது. காகிதமில்லாத பட்ஜெட் தாக்கலுக்கான செலவினம், மாநில அரசு 40 சதவீதம்; மத்திய அரசு 60 சதவீதம் என்ற அடிப்படையில் செய்யப்பட்டு உள்ளது. அரசு ஊழியர்கள் ஓய்வூதிய வயது தொடர்பாக ஏற்கனவே உள்ள நடைமுறை தொடர்கிறது.தகுதியான பயனாளிகளை கண்டறிந்து, மாதம் 1,000 ரூபாய் வழங்கும் திட்டம் செயல்படுத்தப்படும்.

கொரோனா காரணமாக, அரசு பஸ்களில் பயணம் செய்பவர்களின் எண்ணிக்கை குறைந்துள்ளது. ஏழை மக்களே அதிகம் பயணம் செய்கின்றனர்.நகைக்கடன் தள்ளுபடிக்கு தகுதியானவர்கள் யார் என, ஆய்வு செய்ய வேண்டியுள்ளது.இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X