பொது செய்தி

இந்தியா

இருவேறு தடுப்பூசி தவறானது 'சீரம்' நிறுவன தலைவர் கருத்து

Added : ஆக 14, 2021
Share
Advertisement
மும்பை:'கொரோனாவை தடுக்க, ஒருவருக்கு இருவேறு தடுப்பூசிகளை செலுத்துவது தவறானது' என, 'சீரம் இன்ஸ்டிடியூட்' நிறுவன தலைவர் சைரஸ் பூனாவாலா கூறியுள்ளார்.கொரோனாவிற்கு எதிராக, உள்நாட்டு தயாரிப்பான 'கோவாக்சின் மற்றும் கோவிஷீல்டு' தடுப்பூசிகள் நம் நாட்டில் பயன்படுத்தப்படுகின்றன. குறிப்பிட்ட கால இடைவெளியில் ஒரே தடுப்பூசியை இரண்டாவது டோஸாக செலுத்துவது நடைமுறையில்

மும்பை:'கொரோனாவை தடுக்க, ஒருவருக்கு இருவேறு தடுப்பூசிகளை செலுத்துவது தவறானது' என, 'சீரம் இன்ஸ்டிடியூட்' நிறுவன தலைவர் சைரஸ் பூனாவாலா கூறியுள்ளார்.

கொரோனாவிற்கு எதிராக, உள்நாட்டு தயாரிப்பான 'கோவாக்சின் மற்றும் கோவிஷீல்டு' தடுப்பூசிகள் நம் நாட்டில் பயன்படுத்தப்படுகின்றன. குறிப்பிட்ட கால இடைவெளியில் ஒரே தடுப்பூசியை இரண்டாவது டோஸாக செலுத்துவது நடைமுறையில் உள்ளது.

உத்தர பிரதேசத்தில் எதிர்பாராத வகையில் இருவேறு தடுப்பூசிகள் செலுத்திக்கொண்டோர் உடலில், கொரோனா எதிர்ப்பு சக்தி அதிகம் உருவானது, சமீபத்தில் இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் கவனத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டது. இதையடுத்து, இருவேறு தடுப்பூசிகள் செலுத்தும் பரிசோதனையை 300 பேரிடம் மேற்கொள்ள, வேலுார் கிறிஸ்துவ மருத்துவக் கல்லுாரிக்கு, இந்திய மருத்துவ கட்டுப்பாட்டு ஜெனரல் சமீபத்தில் அனுமதி அளித்தார்.

இந்நிலையில், கோவிஷீல்டு தடுப்பூசி தயாரிக்கும் 'சீரம் இன்ஸ்டிடியூட்' நிறுவன தலைவர் சைரஸ் பூனாவாலா கூறியதாவது: இரு தடுப்பூசிகளை ஒருவருக்கு செலுத்துவது தவறு என்பதுடன், இதற்கான எவ்வித அவசியமும் இல்லை என்பதே சரியானது.

இதுபோல் தடுப்பூசி செலுத்திக்கொண்டவர்கள் பாதிக்கப்பட்டால், சீரம் நிறுவனத்தின் மீது மற்றொரு தடுப்பூசி நிறுவனத்தினர் குற்றம் சுமத்துவர். அதே முடிவை நாங்களும் எடுக்க நேரிடும்.ஒருவருக்கு இருவேறு தடுப்பூசிகளை செலுத்துவது பலன் அளிக்கும் என, சோதனை முறையில் உறுதி செய்யப்படவில்லை.இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X