சில வரி செய்திகள்

Added : ஆக 14, 2021
Share
Advertisement
கூவம் ஆற்றில் ஆண் சடலம் மீட்புஅண்ணாசதுக்கம்: செனனை அண்ணாசதுக்கம், நேப்பியர் பாலம் அருகே கூவம் ஆற்றில், ஆண் சடலம் மிதப்பதாக நேற்று காலை போலீசாருக்கு தவகல் வந்தது. சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற அண்ணாசதுக்கம் போலீசார், திருவல்லிக்கேணி தீயணைப்பு படையினர் உதவியுடன் உடலை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக ராஜிவ் காந்தி அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். தொடர்ந்து

கூவம் ஆற்றில் ஆண் சடலம் மீட்பு
அண்ணாசதுக்கம்: செனனை அண்ணாசதுக்கம், நேப்பியர் பாலம் அருகே கூவம் ஆற்றில், ஆண் சடலம் மிதப்பதாக நேற்று காலை போலீசாருக்கு தவகல் வந்தது. சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற அண்ணாசதுக்கம் போலீசார், திருவல்லிக்கேணி தீயணைப்பு படையினர் உதவியுடன் உடலை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக ராஜிவ் காந்தி அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். தொடர்ந்து விசாரிக்கின்றனர்

.வாலிபருக்கு ‛'போக்சோ'
பூந்தமல்லி: பூந்தமல்லியைச் சேர்ந்த, 17 வயது சிறுமிக்கு, அப்பகுதியைச் சேர்ந்த வாலிபர் ஒருவர், திருமணம் செய்து கொள்வதாகக் கூறி, பாலியல் தொல்லை கொடுத்து வந்துள்ளார்.நேற்று, சிறுமியின் பெற்றோர், பூந்தமல்லி காவல் நிலையத்தில் புகாரளித்தனர். போலீசார் அந்த வாலிபரை பிடித்து விசாரித்ததில், கெருகம்பாக்கம், லட்சுமி நகர், பெரியார் தெருவைச் சேர்ந்த மில்டன், 25, எனவும், சிறுமியிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதும் தெரிந்தது. அவரை, 'போக்சோ' சட்டத்தின் கீழ் கைது செய்தனர்.
ஓட்டேரி: சென்னை ஓட்டேரியை சேர்ந்த, 16வயது சிறுமிக்கு, திருவள்ளூர் மாவட்டம், ஊத்துக்கோட்டை, ஜோதி நகரை சேர்ந்த அசோக், 25, என்பவர், மொபைல் போனிலும், நேரிலும், பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இதை அறிந்த சிறுமியின் பெற்றோர், புளியந்தோப்பு அனைத்து மகளிர் போலீசில் புகார் செய்தனர். இது குறித்து விசாரித்த போலீசார், நேற்று மாலை, அசோக்கை கைது செய்தனர்.

துப்புரவு ஊழியர் தற்கொலைகீழ்ப்பாக்கம்: சென்னை கீழ்ப்பாக்கம், புல்லாபுரம், 2வது தெருவைச் சேர்ந்தவர் வெங்கட்டா, 54; மாநகராட்சி துப்புரவு ஊழியர். கடந்த ஒரு மாதமாக உடல் நலம், மன நலம் பாதிப்பால் அவதிப்பட்டதாக கூறப்படுகிறது. இந்நிலையில், நேற்று காலை வீட்டில் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். கீழ்ப்பாக்கம் போலீசார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பினர். சம்பவம் குறித்து விசாரிக்கின்றனர்.

விரக்தியில் கணவர் தற்கொலை
ஆர்.கே.நகர்: சென்னை, தண்டையார்பேட்டை, கருணாநிதி நகரைச் சேர்ந்தவர் ராமன் 30; மினி வேன் ஓட்டுனர். இவருக்கும், கூடுவாஞ்சேரியைச் சேர்ந்த ரேணுகா, 19, என்ற பெண்ணுக்கும், நான்கு மாதங்களுக்கு முன், திருமணம் நடந்தது. ஆடி மாதம் என்பதால், பெண் வீட்டார் ரேணுகாவை, கூடுவாஞ்சேரி அழைத்து சென்றனர். இந்நிலையில், இரு தினங்களுக்கு முன், மனைவியை பார்க்க ராமன் அவரது வீட்டிற்கு சென்ற போது, அவரிடம் பேச, பெண் வீட்டார் அனுமதிக்கவில்லை. மன உளைச்சலுக்கு ஆளான ராமன், நேற்று முன்தினம் இரவு, வீடியோ பதிவில், மன உளைச்சலாக இருப்பதாக கூறி விட்டு, துாக்கிட்டு தற்கொலை செய்துக் கொண்டார். போலீசார் விசாரிக்கின்றனர்.

250 கிலோ குட்கா பறிமுதல்கொடுங்கையூர்: சென்னை கொடுங்கையூர் எம்.ஜி.ஆர்., நகர், 7 வது தெரு, பெட்டிக் கடை ஒன்றில், தமிழக அரசால் தடை செய்யப்பட்ட, ஹான்ஸ், பாக்கு வகைகள் விற்பனை செய்வதாக, ரகசிய தகவல் கிடைத்தது.நேற்று காலை போலீசார் அங்கு சோதனையிட்டனர். அப்போது, குட்கா விற்பனை செய்துக் கொண்டிருந்த, ஏழு கிணறு பகுதியைச் சேர்ந்த நாகூர் மீரா, 24; முகமது ஆசிக், 28, ஆகியோரை கைது செய்தனர். அவர்களிடமிருந்து, 200 கிலோ ஹான்ஸ், 20 கூல் லிப், 30 கிலோ போதை பாக்கு வகைகளை பறிமுதல் செய்தனர். விசாரனைக்கு பின், இருவரும் சிறையில் அடைக்கப்பட்டனர்.

சூளைமேடு: சூளைமேடு போலீசார் நேற்று காலை, 100 அடி சாலையில் கண்காணித்த போது, சந்தேகத்தின்படி ஒரு ஆம்னி பேருந்தை சோதித்தனர். அதில், 350 கிலோ குட்கா இருந்தது. ஆந்திராவிலிருந்து கடத்தி வரப்பட்டதும் தெரிந்தது. இதில் தொடர்புள்ள பாடியைச் சேர்ந்த நடராஜன், 50, கோயம்பேடைச் சேர்ந்த முருகன், 25, உள்ளிட்ட ஐவரை கைது செய்து, ஆம்னி பேருந்து, 350 கிலோ குட்காவை பறிமுதல் செய்தனர்.

200 பேருக்கு தடுப்பூசி
மேடவாக்கம்: செங்கல்பட்டு உணவுப் பாதுகாப்பு துறை, மேடவாக்கம் ஆரம்ப சுகாதார நிலையம், மேடவாக்கம் வியாபாரிகள் சங்கம் ஆகியவை இணைந்து, மேடவாக்கம் சுற்று வட்டார பகுதிகளில் உள்ள ஓட்டல்கள், டீ கடைகள், மளிகை கடைகளில் பணியாற்றும் ஊழியர்களுக்கு சிறப்பு தடுப்பூசி முகாம் நடத்தின. இதில், 200க்கும் மேற்பட்டோருக்கு தடுப்பூசி போடப்பட்டது.

லஞ்சம் வாங்கிய கண்காணிப்பாளர் கைது
ஆதம்பாக்கம்: சென்னையைச் சேர்ந்த பெண் ஒருவர், நில உச்சவரம்பு சட்டத்திற்கு உட்பட்டு, தன் நிலம் வருகிறதா என்பது தொடர்பாக தடையில்லா சான்று பெற கடந்த ஆண்டு விண்ணப்பித்திருந்தார்.இது குறித்து பதில் அறிய, ஆதம்பாக்கத்தில் உள்ள நகர்ப்புற நிலவரி உதவிக் கமிஷனர் அலுவலகத்தை அணுகினார். அவரின் விண்ணப்பத்தை பரிசீலனை செய்து, மேல் அதிகாரிக்குஅனுப்ப, கண்காணிப்பாளர் ராஜசேகர் என்பவர், 5,000 ரூபாய் லஞ்சம் கேட்டார். ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு துறையில், அந்தப் பெண் புகார் செய்தார். அந்த பெண்ணிடம் இருந்து, 5,000 ரூபாயை லஞ்சமாக ராஜசேகர் பெற்றபோது, கையும் களவுமாக பிடித்து, அதிகாரிகள் அவரை கைது செய்தனர்.

காதலியை மிரட்டியவர் மீது புகார்
ஆவடி: சென்னை, ஆவடி அடுத்த வெள்ளானுாரைச் சேர்ந்தவர் புவனா, 26; தனியார் நிறுவன ஊழியர். உடன் பணியாற்றிய அரும்பாக்கத்தைச் சேர்ந்த வில்லாண்டர் பென்னட் ராயன் என்பவரை காதலித்தார். கடந்த ஆண்டு நவம்பரில் திருமணம் நிச்சயிக்கப்பட்டது. பென்னட் ராயன், திருமண செலவுக்காக புவனாவிடம் இருந்து, 3.50 லட்சம் ரூபாயை வங்கி பரிமாற்றம் மூலம் கடனாக பெற்றார். பென்னட் ராயனுக்கு, ஏற்கனவே திருமணமாகி மனைவி, குழந்தை இருப்பது புவனாவிற்கு தெரியவந்தது. இது குறித்து, புவனா விளக்கம் கேட்டார். அப்போதும், பொய் கூறி, அவரை ஏமாற்ற முயன்றார்.இந்நிலையில், புவனா மீது ஆசிட் வீசுவதாக, பென்னட் ராயன் மிரட்டினார். இதுகுறித்த புகாரின் படி, ஆவடி டேங்க் பேக்டரி போலீசார் விசாரிக்கின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X