இந்திய சுதந்திர தின விழா அமெரிக்காவில் கோலாகலம்

Added : ஆக 14, 2021
Share
Advertisement
வாஷிங்டன்:இந்தியாவின், 75வது சுதந்திர தின விழா அமெரிக்காவில் முன்கூட்டியே கோலாகலமாக துவங்கிஉள்ளது. நம் நாட்டின், 75வது சுதந்திர தின விழா கொண்டாடப்படுகிறது. ஆனால் அமெரிக்காவில் முன்னதாகவே இந்தியாவின் சுதந்திர தின விழா கொண்டாட்டங்கள் துவங்கி விட்டன. நேற்று நியூயார்க்கின் குயின்ஸ் பரோ நகரில் இந்திய சுதந்திர தின விழா கொண்டாட்டம் துவங்கியது. இதில் பேசிய குயின்ஸ் பரோ நகர

வாஷிங்டன்:இந்தியாவின், 75வது சுதந்திர தின விழா அமெரிக்காவில் முன்கூட்டியே கோலாகலமாக துவங்கிஉள்ளது. நம் நாட்டின், 75வது சுதந்திர தின விழா கொண்டாடப்படுகிறது.

ஆனால் அமெரிக்காவில் முன்னதாகவே இந்தியாவின் சுதந்திர தின விழா கொண்டாட்டங்கள் துவங்கி விட்டன. நேற்று நியூயார்க்கின் குயின்ஸ் பரோ நகரில் இந்திய சுதந்திர தின விழா கொண்டாட்டம் துவங்கியது.

இதில் பேசிய குயின்ஸ் பரோ நகர தலைவர் டோனோவன் ரிச்சர்ட், ''இந்திய சமூகத்தினரின் பங்களிப்பின்றி குயின்ஸ் நகரம் இந்த அளவிற்கு முன்னேற்றம் அடைந்திருக்காது என்பதால் இந்தியாவின், 75வது சுதந்திர தின விழாவை மூன்று நாட்கள் கொண்டாட உள்ளோம்,'' என்றார்.சாம்போர்டு நகரில் நடந்த நிகழ்ச்சியில் மேயர் டேவிட் மார்ட்டின் அஹிம்சை வழியில் இந்தியா சுதந்திரம் பெற்றதை பாராட்டி, கவுரவ வாழ்த்து மடல் வெளியிட்டார்.

நியூயார்க்கின் எம்பயர் ஸ்டேட் உள்ளிட்ட பல கட்டடங்களை இந்திய சுதந்திர தின விழாவை யொட்டி, வண்ண விளக்குகளால் அலங்கரிக்கும் பணி நடக்கிறது. புகழ் பெற்ற டைம்ஸ் சதுக்கத்தில் 25 அடி உயர கம்பத்தில் 60 அடி நீளம் உள்ள இந்திய தேசிய கொடி பறக்க விடப்பட உள்ளது. இந்திய சுதந்திர தின விழாவை முன்னிட்டு தலைநகர் வாஷிங்டன் முதல் நியூயார்க் வரை, நுாற்றுக்கணக்கான நிகழ்ச்சிகள் நடக்க உள்ளன. இதில் மாகாண கவர்னர்கள், எம்.பி.,க்கள் உள்ளிட்டோர் பங்கேற்க உள்ளனர்.

ஒளி வெள்ளத்தில் தேசிய கொடிஅமெரிக்காவின் நியூயார்க் நகரில் 408 அடி உயரமுள்ள 'ஒன் வேர்ல்டு டிரேட் சென்டர்' என்ற கட்டடம் உள்ளது. பயங்கரவாதிகளால் தகர்க்கப்பட்ட இரட்டை கோபுரம் இருந்த இடத்தில் அமைந்துள்ள இந்த கட்டடம், இந்திய தேசிய கொடியை பிரதிபலிக்கும் வகையில் வண்ண விளக்குகளால் ஜொலிக்க உள்ளது. இதன் அருகில் உள்ள 'ஒன் பிரையன்ட் பார்க், ஒன் பைவ் ஒன்' கட்டடங்களும், தேசியக் கொடி நிறத்திலான வண்ண விளக்குகளால் பிரகாசிக்க உள்ளன.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X