மீனவர் பட்டா விவகாரம் தாசில்தார் ஆய்வு

Added : ஆக 14, 2021
Share
Advertisement
மாமல்லபுரம்: செங்கல்பட்டு மாவட்டம் கல்பாக்கம் அடுத்த உய்யாலிகுப்பம், புதுப்பட்டினம் குப்பம் மீனவர் பகுதிகளில் ஏற்பட்ட கடலரிப்பால் வீடுகள் அழிந்தன.பிற்படுத்தப்பட்டோர் நலத் துறை, புதுப்பட்டினம் பகுதியில் அவர்களுக்கு இலவச வீட்டு மனை வழங்கியது. சுனாமி பாதிப்பிற்கு பின், தன்னார்வ நிறுவனம் வீடுகள் கட்டி ஒப்படைத்தது. பயனாளிகளுக்கு மனை அனுபவ சான்று மட்டுமே

மாமல்லபுரம்: செங்கல்பட்டு மாவட்டம் கல்பாக்கம் அடுத்த உய்யாலிகுப்பம், புதுப்பட்டினம் குப்பம் மீனவர் பகுதிகளில் ஏற்பட்ட கடலரிப்பால் வீடுகள் அழிந்தன.

பிற்படுத்தப்பட்டோர் நலத் துறை, புதுப்பட்டினம் பகுதியில் அவர்களுக்கு இலவச வீட்டு மனை வழங்கியது. சுனாமி பாதிப்பிற்கு பின், தன்னார்வ நிறுவனம் வீடுகள் கட்டி ஒப்படைத்தது. பயனாளிகளுக்கு மனை அனுபவ சான்று மட்டுமே வழங்கப்பட்டு, கிராம கணக்கில் அவர்களின் பெயரை பதியவில்லை.நிரந்தர கணினி பட்டா வழங்கப்படாததால், 23 ஆண்டுகளாக வருவாய் துறையிடம் மீனவர்கள் கோருகின்றனர்.

இச்சிக்கல் குறித்து நம் நாளிதழில் செய்தி வெளியிடப்பட்டது.இது குறித்த ஆய்வுக்கு, மாவட்ட கலெக்டர் ராகுல்நாத் உத்தரவிட்டதைத் தொடர்ந்து, திருக்கழுக்குன்றம் தாசில்தார் சிவசங்கரன், மீனவ வசிப்பிட பகுதிகளில் நேற்று முன்தினம் ஆய்வு செய்தார்.பயனாளிகளின் மனை அனுபவ சான்று, வீட்டு வரி, மின் இணைப்பு சான்று, ஆதார் எண் ஆகிய ஆவணங்களை வருவாய் துறையினரிடம் அளிக்க அறிவுறுத்தினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X