பொது செய்தி

தமிழ்நாடு

10 சதவீத 'ரிசர்வ் சைட்'டுக்கு பதிலாக பணம்! வேலுமணி உத்தரவு திரும்ப பெறப்படுமா?

Added : ஆக 14, 2021
Share
Advertisement
புதிய, 'லே - அவுட்'களில், 10 சதவீத பொது ஒதுக்கீட்டு இடத்துக்குப் பதிலாக பணம் செலுத்தினால் போதும் என, கடந்த ஆட்சியில் பிறப்பிக்கப்பட்ட உத்தரவை திரும்பப் பெற வேண்டும் என்ற கோரிக்கை வலுத்துள்ளது.கடந்த அ.தி.மு.க., ஆட்சியின்போது, நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை அமைச்சராக வேலுமணி இருந்தார். நகர ஊரமைப்புத் துறையின் அதிகாரத்தைப் பறிக்கும் வகையில், அவருடைய

புதிய, 'லே - அவுட்'களில், 10 சதவீத பொது ஒதுக்கீட்டு இடத்துக்குப் பதிலாக பணம் செலுத்தினால் போதும் என, கடந்த ஆட்சியில் பிறப்பிக்கப்பட்ட உத்தரவை திரும்பப் பெற வேண்டும் என்ற கோரிக்கை வலுத்துள்ளது.

கடந்த அ.தி.மு.க., ஆட்சியின்போது, நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை அமைச்சராக வேலுமணி இருந்தார். நகர ஊரமைப்புத் துறையின் அதிகாரத்தைப் பறிக்கும் வகையில், அவருடைய துறையின் சார்பில் பல்வேறு அரசாணைகள் பிறப்பிக்கப்பட்டன. குறிப்பாக, 2019ம் ஆண்டில், ஒருங்கிணைந்த கட்டட வளர்ச்சி விதிகள் கொண்டு வரப்பட்டதில், இந்த எல்லை மீறல் பகிரங்கமாக நடந்தது.

நகர ஊரமைப்புச் சட்டத்தின்படியும், 1992 ஆக., 20ல் போடப்பட்ட அரசாணை: 222ன் படியும், 2,500 சதுர மீட்டருக்கு அதிகமான பரப்பில் அமைக்கப்படும் அனைத்து லே - அவுட்களுக்கும், அதன் மொத்த பரப்பில், 10 சதவீத இடத்தை பொது ஒதுக்கீட்டு இடமாக - ரிசர்வ் சைட் - ஒதுக்க வேண்டும் என்பது கட்டாயம்.

இந்த இடங்களை தான பத்திரம் மூலமாக, சம்பந்தப்பட்ட உள்ளாட்சி அமைப்பிடம் ஒப்படைத்த பின்பே, அந்த லே - அவுட்டுக்கு திட்ட அனுமதி வழங்கப்படும்.பூங்கா, விளையாட்டு மைதானம், சமுதாயக்கூடம் போன்றவற்றை அமைக்க, இந்த இடம் பயன்படுத்தப்படும். பெருநகரங்களில், நுரையீரல் போல செயல்பட்டு, மக்களுக்கு உதவுவது இந்த இடங்கள்தான். இந்த இடங்கள் எந்த பயன்பாட்டுக்கு ஒதுக்கப்பட்டதோ, அதற்கு மட்டுமே பயன்படுத்த வேண்டும் என்பதற்கு சுப்ரீம் கோர்ட் மற்றும் ஐகோர்ட்களின் உத்தரவுகள் நிறைய உள்ளன.

சூழலுக்கு ஆபத்து'லே - அவுட்களில் 10 சதவீத இடங்களை விட வேண்டியதில்லை; அதற்குப் பதிலாக பணம் செலுத்தினால் போதும்' என, ஒருங்கிணைந்த கட்டட வளர்ச்சி விதிகளில் தளர்வு வழங்கப்பட்டது. அதாவது, 3,000 சதுர மீட்டருக்கு உட்பட்ட லே - அவுட்களுக்கு, திறந்தவெளியிடம் ஒதுக்க வேண்டியதில்லை என்று அந்த விதிகளில் அனுமதி வழங்கப்பட்டது.

அது மட்டுமின்றி, 3000 சதுர மீட்டரில் இருந்து 10 ஆயிரம் சதுர மீட்டர் வரையிலான திட்டங்களுக்கு, 10 சதவீத இடத்தை ஒதுக்கலாம்; அல்லது அந்த 10 சதவீத நிலத்துக்கான வழிகாட்டி மதிப்பை, அரசுக்கு செலுத்தினால் போதும்.அதிலும் ஒரு சலுகையாக, 10 ஆயிரம் சதுர மீட்டரில் 3,000 சதுர மீட்டரைக் கழித்து, 7,000 சதுர மீட்டரில் 10 சதவீத இடத்தை ஒதுக்கினால் போதும் அல்லது அதற்கான வழிகாட்டி மதிப்பைச் செலுத்தினால் போதும் என்றும் அந்த விதிகளில் கூறப்பட்டது.

பெருநகரங்களில் 10 சதவீத இடத்துக்கான வழிகாட்டி மதிப்பை ஒப்பிடுகையில், சந்தை மதிப்பு மிக அதிகமாக இருக்கும் என்பதால், இந்த விதிமுறைகள் வந்தபின், பெரும்பாலான, 'புரமோட்டர்கள்' இந்த 10 சதவீத இடத்தை ஒதுக்குவதேயில்லை.அதற்குப் பதிலாக குறைந்த தொகையை அரசுக்குச் செலுத்தி விட்டு, சந்தை மதிப்பில் அந்த நிலத்தை விற்று பெரும் லாபம் பார்க்கின்றனர்.


நான்கு திட்டங்கள்


இதற்காகவே, ஒரே நிலத்தை நான்கு திட்டங்களாகப் பிரித்து லே - அவுட் அமைக்கின்றனர். உதாரணமாக, 10 ஏக்கர் பரப்பில் லே - அவுட் போட்டால், 1 ஏக்கர் ரிசர்வ் சைட் ஒதுக்க வேண்டும். அதையே நான்காகப் பிரித்து, திட்ட அனுமதி வாங்கி விட்டால் ஒதுக்கவே வேண்டியதில்லை. இதே நிலைமை நீடித்தால், இன்னும் சில ஆண்டுகளில் எந்த நகரத்திலும் பூங்கா, விளையாட்டு மைதானத்துக்கு இடமே இருக்காது. 'எனவே, இந்த விதிகளில் மாற்றம் செய்து, 10 சதவீத பொது ஒதுக்கீட்டு இடங்கள் ஒதுக்குவது கட்டாயம் என்ற நிலையை அரசு உருவாக்க வேண்டும்' என, சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் வலியுறுத்தி உள்ளனர்.
- நமது நிருபர் -

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X