இந்தியா

பாலில் சர்க்கரைக்கு பதில் எலி மருந்து 2 சிறுவர்கள் பலி; தாய் கவலைக்கிடம்

Added : ஆக 14, 2021
Share
Advertisement
காரைக்கால்:சர்க்கரை என நினைத்து, பாலில் எலி மருந்தை கலந்து கொடுத்ததில், இரண்டு சிறுவர்கள் இறந்தனர். தாய் ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.புதுச்சேரி, காரைக்கால் மாவட்டம், திருநள்ளாறு, சேத்துாரைச் சேர்ந்தவர் பாலமுருகன்; வெளிநாட்டில் வேலை செய்கிறார். இவரது மனைவி பிரியா, 27. மகன்கள் ஸ்ரீசாந்த், 4; ஸ்ரீவிஷ்ணு, 3.நேற்று முன்தினம் பிரியா, பால் காய்ச்சி

காரைக்கால்:சர்க்கரை என நினைத்து, பாலில் எலி மருந்தை கலந்து கொடுத்ததில், இரண்டு சிறுவர்கள் இறந்தனர். தாய் ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

புதுச்சேரி, காரைக்கால் மாவட்டம், திருநள்ளாறு, சேத்துாரைச் சேர்ந்தவர் பாலமுருகன்; வெளிநாட்டில் வேலை செய்கிறார். இவரது மனைவி பிரியா, 27. மகன்கள் ஸ்ரீசாந்த், 4; ஸ்ரீவிஷ்ணு, 3.நேற்று முன்தினம் பிரியா, பால் காய்ச்சி குழந்தைகளுக்கு கொடுத்து, தானும் குடித்துள்ளார். சிறிது நேரத்தில் குழந்தைகள் மயங்கி விழுந்தனர். அதிர்ச்சி அடைந்த பிரியா, உறவினர் ரேவதி என்பவருக்கு போனில் தகவல் தெரிவித்து உள்ளார்.

அவர் வருவதற்கு முன், பிரியாவும் வீட்டில் மயங்கி விழுந்துள்ளார். மூவரையும் உறவினர்கள், திருவாரூர் அரசு மருந்துவமனையில் சேர்ந்தனர். இச்சம்பவம் குறித்து, போலீசார் விசாரித்தனர். பிரியா வீட்டில் எலித்தொல்லை அதிகமாக இருந்ததால், எலி மருந்தை சமையல் அறையில் வைத்துள்ளார். குழந்தைகளுக்கு பால் காய்ச்சும் போது, சர்க்கரை என நினைத்து, எலி மருந்தை பாலில் கலந்து கொடுத்தது தெரிந்தது.

இந்நிலையில், ஸ்ரீசாந்த், ஸ்ரீவிஷ்ணு சிகிச்சை பலனின்றி இறந்தனர். பிரியா சிகிச்சை பெற்று வருகிறார். திருநள்ளாறு போலீசார் வழக்குப் பதிந்து, தற்செயலாக நடந்ததா; அல்லது குழந்தைகள் கொலை செய்யப்பட்டனரா என்ற கோணத்தில் விசாரித்து வருகின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X