பொது செய்தி

தமிழ்நாடு

ரூ.2,821 கோடி கடன் திட்ட அறிக்கை வெளியீடு

Added : ஆக 14, 2021
Share
Advertisement
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் மாவட்டத்தில், நடப்பாண்டில் 2,821 கோடி ரூபாய்க்கான கடன் திட்ட அறிக்கையை, கலெக்டர் ஆர்த்தி நேற்று வெளியிட்டார்.காஞ்சிபுரம் மாவட்டத்திற்கான, வருடாந்திர கடன் திட்ட அறிக்கையை, கலெக்டர் வளாக கூட்டரங்கில், கலெக்டர் ஆர்த்தி நேற்று வெளியிட்டார். இக்கூட்டத்தில், ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் ஸ்ரீதேவி, இந்தியன் வங்கி மண்டல மேலாளர் ஸ்ரீமதி,
 ரூ.2,821 கோடி கடன் திட்ட அறிக்கை வெளியீடு

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் மாவட்டத்தில், நடப்பாண்டில் 2,821 கோடி ரூபாய்க்கான கடன் திட்ட அறிக்கையை, கலெக்டர் ஆர்த்தி நேற்று வெளியிட்டார்.

காஞ்சிபுரம் மாவட்டத்திற்கான, வருடாந்திர கடன் திட்ட அறிக்கையை, கலெக்டர் வளாக கூட்டரங்கில், கலெக்டர் ஆர்த்தி நேற்று வெளியிட்டார். இக்கூட்டத்தில், ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் ஸ்ரீதேவி, இந்தியன் வங்கி மண்டல மேலாளர் ஸ்ரீமதி, 'நபார்டு' வங்கி உதவி பொது மேலாளர் விஜயலட்சுமி, மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் சண்முகராஜ் ஆகியோர் பங்கேற்றனர்.

கடன் திட்ட அறிக்கையின்படி, காஞ்சிபுரம் மாவட்டத்தில் 2021 - 22ம் ஆண்டுக்கான கடன் திட்டத்தில் 2,821 கோடி ரூபாய் இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. கடந்தாண்டைவிட இந்தாண்டு 14.39 சதவீதம் அதிகமாகும்.இதில் 1,260 கோடி ரூபாய் விவசாயத்திற்கும், 856 கோடி ரூபாய் சிறு, குறு தொழில் முனைவோருக்கும், 704 கோடி ரூபாய் வீட்டுவசதி, கல்வி போன்றவைக்கும் வழங்கப்பட உள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X