பொது செய்தி

தமிழ்நாடு

செங்கல்பட்டு போலீசாருக்கு ரோந்து வாகனம் வழங்கல்

Added : ஆக 14, 2021
Share
Advertisement
செங்கல்பட்டு: செங்கல்பட்டு மாவட்டத்தில், செங்கல்பட்டு நகரம் மற்றும் தாலுகா, கூடுவாஞ்சேரி, மறைமலை நகர், ஓட்டேரி, கேளம்பாக்கம், தாழம்பூர் ஆகிய ஏழு காவல் நிலைய போலீசாருக்கு, ரோந்து வாகனம் வழங்க முடிவு செய்யப்பட்டது.சுழற்சி முறையில் பணி அதன்படி, 23 இருசக்கர ரோந்து வாகனம், குழந்தை நல அலுவலர்களுக்கு 16 'ஆக்டிவா' இருசக்கர வாகனம், 16 மடிக்கணினிகள் வழங்கும் நிகழ்ச்சி
 செங்கல்பட்டு போலீசாருக்கு ரோந்து வாகனம் வழங்கல்

செங்கல்பட்டு: செங்கல்பட்டு மாவட்டத்தில், செங்கல்பட்டு நகரம் மற்றும் தாலுகா, கூடுவாஞ்சேரி, மறைமலை நகர், ஓட்டேரி, கேளம்பாக்கம், தாழம்பூர் ஆகிய ஏழு காவல் நிலைய போலீசாருக்கு, ரோந்து வாகனம் வழங்க முடிவு செய்யப்பட்டது.

சுழற்சி முறையில் பணி அதன்படி, 23 இருசக்கர ரோந்து வாகனம், குழந்தை நல அலுவலர்களுக்கு 16 'ஆக்டிவா' இருசக்கர வாகனம், 16 மடிக்கணினிகள் வழங்கும் நிகழ்ச்சி கூடுவாஞ்சேரியில் நேற்று நடந்தது.எஸ்.பி., விஜயகுமார் பங்கேற்று, இருசக்கர வாகனம் மற்றும் மடிக்கணினிகளை போலீசாருக்கு வழங்கி பேசியதாவது:நகர்புற காவல் நிலையத்திற்கு உட்பட்ட பகுதிகளில், பொதுமக்களின் பாதுகாப்பு மற்றும் குற்றங்கள் தடுப்பதற்காக, ரோந்து பணிக்கு, இருசக்கர வாகனங்கள் வழங்கப்பட்டுள்ளன.

இவ்வாகனங்களில் போலீசார் சுழற்சி முறையில் ஈடுபடுவர்.சாலை விபத்துகள் நடந்தால் உடனடியாக அங்கு சென்று, பாதிக்கப்பட்டோருக்கு உதவி செய்யும் பணியில் ஈடுபடுவர்.நடவடிக்கைமாவட்டத்தில், பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களை தடுக்க, ஒவ்வொரு காவல் நிலையத்திலும், குழந்தைகள் நல அலுவலர் நியமிக்கப்பட்டுஉள்ளனர்.அவர்களுக்கு முதற்கட்டமாக இருசக்கர வாகனமும், மடிக்கணினியும் வழங்கப்பட்டுள்ளன. இதனால், பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு ஏற்படும் பிரச்னைகளை தடுத்து, சட்டரீதியான நடவடிக்கை எடுக்கப்படும்.இவ்வாறு அவர் பேசினார்.வண்டலுார் டி.எஸ்.பி., அனுமந்தன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X