கோர்ட் செய்தி

தமிழ்நாடு

அரசு வக்கீல்களுக்கு வயது தளர்வு எதிர்த்த வழக்கில் 'நோட்டீஸ்'

Added : ஆக 14, 2021
Share
Advertisement
மதுரை:மாவட்ட நீதிமன்ற அரசு வழக்கறிஞர்கள் நியமனத்திற்கு வயது வரம்பு தளர்விற்கு எதிரான வழக்கில், தமிழக அரசுக்கு நோட்டீஸ் அனுப்ப, உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டது.மதுரை வழக்கறிஞர் சரவணன் தாக்கல் செய்த பொதுநல மனு:மாவட்ட நீதிமன்றங்களில், அரசு வழக்கறிஞர்களாக 60 வயதிற்கு உட்பட்டவர்களைத் தான் 1961 அரசாணைப்படி நியமிக்க வேண்டும். தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்படும்

மதுரை:மாவட்ட நீதிமன்ற அரசு வழக்கறிஞர்கள் நியமனத்திற்கு வயது வரம்பு தளர்விற்கு எதிரான வழக்கில், தமிழக அரசுக்கு நோட்டீஸ் அனுப்ப, உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டது.

மதுரை வழக்கறிஞர் சரவணன் தாக்கல் செய்த பொதுநல மனு:மாவட்ட நீதிமன்றங்களில், அரசு வழக்கறிஞர்களாக 60 வயதிற்கு உட்பட்டவர்களைத் தான் 1961 அரசாணைப்படி நியமிக்க வேண்டும். தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்படும் போதெல்லாம் ஆளுங்கட்சியைச் சேர்ந்தவர்களே, அரசு வழக்கறிஞர்களாக நியமிக்கப்படுகின்றனர்.

தகுதி, திறமை, முன் அனுபவத்தை கருத்தில் கொள்வதில்லை. குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ள சிலர், மாவட்ட நீதிமன்றங்களில் அரசு வழக்கறிஞர்களாக ஏற்கனவே நியமிக்கப்பட்டனர். இதனால், நீதித்துறையின் நிர்வாகம் பாதிக்கிறது.தற்போது, மாவட்ட நீதிமன்றங்கள், தீர்ப்பாயங்களில் அரசு வழக்கறிஞர்களை நியமிக்க, விண்ணப்பங்கள் பெற, கலெக்டர்கள் அறிவிப்பு வெளியிடுகின்றனர்.

இது வெறும் சம்பிரதாய நடவடிக்கையே. ஆளுங்கட்சியினரை நியமிக்க முயற்சி நடக்கிறது. மாவட்ட நீதிமன்ற அரசு வழக்கறிஞர்கள் நியமனத்திற்கு வயது வரம்பில் தளர்வு அளித்து, உள்துறை கூடுதல் தலைமைச் செயலர் ஜூலை 23ல் கலெக்டர்களுக்கு கடிதம் அனுப்பினார். இதற்கு கவர்னரின் ஒப்புதல் பெறவில்லை. சிலருக்கு சலுகை செய்ய, வயது வரம்பு தளர்வு அளிக்கப்பட்டுள்ளது. அது சட்டவிரோதம். வயது வரம்பு தளர்வு அளித்த கடிதத்தை ரத்து செய்ய வேண்டும். அரசு வழக்கறிஞர்கள் நியமன விதிகளை உருவாக்க உத்தரவிட வேண்டும். இவ்வாறு, சரவணன் குறிப்பிட்டார்.

நீதிபதிகள் எம்.துரைசுவாமி, கே.முரளிசங்கர் அமர்வு, தமிழக உள்துறை செயலர், உள்துறை கூடுதல் தலைமைச் செயலருக்கு நோட்டீஸ் அனுப்பி, ஆறு வாரங்கள் ஒத்திவைத்தது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X