சம்பவம் செய்தி

தமிழ்நாடு

சில வரி செய்திகள்

Added : ஆக 14, 2021
Share
Advertisement
பஸ் உரிமையாளர் மர்ம சாவுகடலுார்: கடலுார், புதுப்பாளையத்தைச் சேர்ந்தவர் பிரபாகரன், 56; பஸ் உரிமையாளர். இவர், தினமும் 'சில்வர் பீச்'சில் நடைபயிற்சி செய்வார். நேற்று காலை நடைபயிற்சிக்கு சென்றவர் வீடு திரும்பவில்லை.சவுக்கு தோப்பு அருகே, கடற்கரையில் அவரது உடல் கரை ஒதுங்கி இருந்தது. துறைமுகம் போலீசார் விசாரித்தனர். கொரோனா ஊரடங்கில் இருந்து இரண்டு ஆண்டுகளாக தொழில்
 சில வரி செய்திகள்

பஸ் உரிமையாளர் மர்ம சாவு

கடலுார்: கடலுார், புதுப்பாளையத்தைச் சேர்ந்தவர் பிரபாகரன், 56; பஸ் உரிமையாளர். இவர், தினமும் 'சில்வர் பீச்'சில் நடைபயிற்சி செய்வார். நேற்று காலை நடைபயிற்சிக்கு சென்றவர் வீடு திரும்பவில்லை.சவுக்கு தோப்பு அருகே, கடற்கரையில் அவரது உடல் கரை ஒதுங்கி இருந்தது. துறைமுகம் போலீசார் விசாரித்தனர். கொரோனா ஊரடங்கில் இருந்து இரண்டு ஆண்டுகளாக தொழில் பாதிப்பால் கடன் பிரச்னை இருந்துள்ளது. அதனால் மனமுடைந்த அவர் கடலில் குதித்து தற்கொலை செய்து கொண்டாரா அல்லது வேறு காரணமா என, போலீசார் விசாரிக்கின்றனர்.

கட்டட மேஸ்திரி கொலை

ஆம்பூர்: திருப்பத்துார் மாவட்டம், ஆம்பூர் அருகே பெரியாங்குப்பத்தை சேர்ந்தவர் சிவகுமார், 35, கட்டட மேஸ்திரி. மனைவி, இரண்டு ஆண், மூன்று பெண் குழந்தைகள் உள்ளனர். வீட்டு திண்ணையில் துாங்கிய சிவகுமார் நேற்று காலை, ரத்த வெள்ளத்தில் இறந்து கிடந்தார். சிவகுமார் தலையில் கல்லை போட்டு மர்ம நபர்கள் கொலை செய்தது தெரிந்தது. அவர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X