சம்பவம் செய்தி

தமிழ்நாடு

மாவட்ட பதிவாளரிடம் ரூ.48 ஆயிரம் பறிமுதல்

Added : ஆக 14, 2021
Share
Advertisement
கரூர்:கரூர் மாவட்ட பதிவாளர் காரில் இருந்து, கணக்கில் வராத 48 ஆயிரம் ரூபாயை லஞ்ச ஒழிப்பு போலீசார் பறிமுதல் செய்தனர்.பத்திரப்பதிவு துறையின், கரூர் மாவட்ட பதிவாளராக - நிர்வாகம் - இருப்பவர் பாஸ்கரன், 54. இவர் மீது ஏராளமான ஊழல் புகார்கள், லஞ்ச ஒழிப்பு போலீசாருக்கு சென்றன.நேற்று முன்தினம் இரவு 10:00 மணிக்கு பாஸ்கரன், கரூர் - உப்பிடமங்கம் சாலையில் காரில் சென்று கொண்டிருந்தார்.

கரூர்:கரூர் மாவட்ட பதிவாளர் காரில் இருந்து, கணக்கில் வராத 48 ஆயிரம் ரூபாயை லஞ்ச ஒழிப்பு போலீசார் பறிமுதல் செய்தனர்.

பத்திரப்பதிவு துறையின், கரூர் மாவட்ட பதிவாளராக - நிர்வாகம் - இருப்பவர் பாஸ்கரன், 54. இவர் மீது ஏராளமான ஊழல் புகார்கள், லஞ்ச ஒழிப்பு போலீசாருக்கு சென்றன.நேற்று முன்தினம் இரவு 10:00 மணிக்கு பாஸ்கரன், கரூர் - உப்பிடமங்கம் சாலையில் காரில் சென்று கொண்டிருந்தார். அப்போது, லஞ்ச ஒழிப்பு டி.எஸ்.பி., நடராஜன் தலைமையிலான போலீசார், இவரது காரை நிறுத்தி சோதனை செய்தனர்.

அதில் 48 ஆயிரம் ரூபாய் இருந்தது. அதற்கு கணக்கு கேட்டபோது, பாஸ்கரன் முறையாக விளக்கம் அளிக்கவில்லை.தொடர்ந்து அவரை, கரூர் கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள மாவட்ட பதிவாளர் அலுவலகத்துக்கு அழைத்து வந்தனர். அவரது அறையில் நடந்த சோதனையில், ஏராளமான ஆவணங்களை கைப்பற்றினர். பாஸ்கரன், அவரது கார் டிரைவர் சந்திரசேகரன், 44, ஆகியோர் மீது லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X