பொது செய்தி

தமிழ்நாடு

காரைக்குடி அழகப்பா பல்கலை துணைவேந்தர் தேடல் குழு கலைப்பு

Added : ஆக 14, 2021
Share
Advertisement
மதுரை:காரைக்குடி அழகப்பா பல்கலையின் புதிய துணைவேந்தர் தேடல் குழுவை கலைத்து, கவர்னர் பன்வாரிலால் புரோஹித் உத்தரவிட்டுள்ளார்.காரைக்குடி அழகப்பா பல்கலை துணைவேந்தர் ராஜேந்திரன் பதவி காலம் முடிந்த பின், புதிய துணைவேந்தரை தேர்வு செய்யும் தேடல் குழு, சட்டப் பல்கலை முன்னாள் துணைவேந்தர் சத்தியநாராயணா தலைமையில் ஏற்படுத்தப்பட்டது.இதில், மதுரை காமராஜ் பல்கலை முன்னாள்

மதுரை:காரைக்குடி அழகப்பா பல்கலையின் புதிய துணைவேந்தர் தேடல் குழுவை கலைத்து, கவர்னர் பன்வாரிலால் புரோஹித் உத்தரவிட்டுள்ளார்.

காரைக்குடி அழகப்பா பல்கலை துணைவேந்தர் ராஜேந்திரன் பதவி காலம் முடிந்த பின், புதிய துணைவேந்தரை தேர்வு செய்யும் தேடல் குழு, சட்டப் பல்கலை முன்னாள் துணைவேந்தர் சத்தியநாராயணா தலைமையில் ஏற்படுத்தப்பட்டது.

இதில், மதுரை காமராஜ் பல்கலை முன்னாள் பேராசிரியர் மணிவேல் - அரசு பிரதிநிதி, பாரதிதாசன் பல்கலை முன்னாள் துணைவேந்தர் மீனா - செனட் பிரதிநிதி.சென்னை பல்கலை முன்னாள் துணைவேந்தர் துரைசாமி, தமிழ்நாடு ஆசிரியர் கல்வி பல்கலை முன்னாள் துணைவேந்தர் தங்கசாமி - சிண்டிகேட் பிரதிநிதிகள் உறுப்பினர்களாக இடம் பெற்றிருந்தனர்.

இக்குழு 162 விண்ணப்பங்களை பெற்று பரிசீலனை செய்து, ஏழு பேரை நேர்காணலுக்கு அழைத்தது. இவர்களில், மதுரை காமராஜ் பல்கலை முன்னாள் துணைவேந்தர் உட்பட மூன்று பேர் பட்டியலை ஆக., 11ல் கவர்னரிடம் சமர்ப்பித்தது.

ஆனால், பரிந்துரைத்த மூன்று பேரையும் கவர்னர் ஏற்கவில்லை. புதிய தேடல் குழுவை அமைக்குமாறு பல்கலை பதிவாளருக்கு, கவர்னரின் செயலர் ஆனந்தராவ் வி.பாட்டீல் கடிதம் அனுப்பியுள்ளார்.விரைவில் மீண்டும் புதிய துணைவேந்தர் தேடல் குழு அமைக்கப்பட உள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X