பட்ஜெட் ஏமாற்றமளிக்கிறது : அரசு பணியாளர் சங்கம் கண்டனம்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

பட்ஜெட் ஏமாற்றமளிக்கிறது : அரசு பணியாளர் சங்கம் கண்டனம்

Added : ஆக 14, 2021
Share
சிவகங்கை:''தமிழக பட்ஜெட் அரசு ஊழியர்களுக்கு ஏமாற்ற மளிக்கிறது,'' என தமிழ்நாடு அரசு பணியாளர் சங்க மாநில தலைவர் பி.குமார் தெரிவித்தார்.அவர் கூறியதாவது, தமிழக பட்ஜெட்டில் நிதிப்பற்றாக்குறை சுமையை ஒட்டு மொத்தமாக அரசு ஊழியர்களின் தலையில் சுமத்தும் அணுகுமுறை வருத்தம் தருகிறது. கொரோனா பரவல் காலத்தில் அரசு ஊழியர்களின் சம்பளத்தில் அகவிலைப்படி, சரண்டர் ரத்து, ஒரு நாள்

சிவகங்கை:''தமிழக பட்ஜெட் அரசு ஊழியர்களுக்கு ஏமாற்ற மளிக்கிறது,'' என தமிழ்நாடு அரசு பணியாளர் சங்க மாநில தலைவர் பி.குமார் தெரிவித்தார்.

அவர் கூறியதாவது, தமிழக பட்ஜெட்டில் நிதிப்பற்றாக்குறை சுமையை ஒட்டு மொத்தமாக அரசு ஊழியர்களின் தலையில் சுமத்தும் அணுகுமுறை வருத்தம் தருகிறது. கொரோனா பரவல் காலத்தில் அரசு ஊழியர்களின் சம்பளத்தில் அகவிலைப்படி, சரண்டர் ரத்து, ஒரு நாள் சம்பளம் பிடித்தம் என கடந்த ஆண்டு முதல் இந்த ஆண்டு ஜூன் வரை அரசு ஊழியர்களுக்கு சேர வேண்டிய ரூ.9,500 கோடியை அரசு எடுத்து கொண்டது.

தற்போது அகவிலைப்படி உயர்வை 9 மாதத்திற்கு தாமதித்து இருப்பதின் மூலம் மேலும் ரூ.4500 கோடி அரசு ஊழியர்களின் சம்பளத்தில் இழப்பு ஏற்படுகிறது. மத்திய அரசு அகவிலைப்படி அறிவித்த பின்னரும் மாநில அரசு இப்படி செய்திருப்பது அதிர்ச்சி, ஏமாற்றமளிக்கிறது. தமிழக அரசு பொறுப்பை தட்டிக்கழிக்கிறது. தமிழக பட்ஜெட் மக்கள், அரசு ஊழியர்களுக்கு நம்பிக்கை இழப்பை ஏற்படுத்தியுள்ளது, என்றார்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X