பொது செய்தி

இந்தியா

விமான கட்டணம் அதிரடியாக அதிகரிப்பு

Updated : ஆக 14, 2021 | Added : ஆக 14, 2021 | கருத்துகள் (14)
Share
Advertisement
புதுடில்லி-உள்நாட்டு விமானப் பயணத்துக்கான குறைந்தபட்ச மற்றும் அதிகபட்சக் கட்டணம் உயர்த்தப்படுகிறது.விமான போக்குவரத்து துறை அமைச்சகம் நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:உள்நாட்டு விமான போக்குவரத்தில் 40 நிமிடங்களுக்கு உள்ளான பயணத்துக்கான குறைந்தபட்ச கட்டணம் 2,600 ரூபாயாக இருந்தது; இது, 2,900 ரூபாயாக உயர்த்தப்படுகிறது. அதிகபட்ச கட்டணம், 12.82 சதவீதம்
விமான கட்டணம், அதிகரிப்பு, flight fare, hike

புதுடில்லி-உள்நாட்டு விமானப் பயணத்துக்கான குறைந்தபட்ச மற்றும் அதிகபட்சக் கட்டணம் உயர்த்தப்படுகிறது.

விமான போக்குவரத்து துறை அமைச்சகம் நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:உள்நாட்டு விமான போக்குவரத்தில் 40 நிமிடங்களுக்கு உள்ளான பயணத்துக்கான குறைந்தபட்ச கட்டணம் 2,600 ரூபாயாக இருந்தது; இது, 2,900 ரூபாயாக உயர்த்தப்படுகிறது. அதிகபட்ச கட்டணம், 12.82 சதவீதம் உயர்த்தப்பட்டு 8,800 ரூபாயாக நிர்ணயிக்கப்படுகிறது. அதேபோல் 40 - 60 நிமிடங்கள் வரையிலான பயணத்துக்கு குறைந்தபட்சக் கட்டணம் 3,300 ரூபாயிலிருந்து 3,700 ரூபாயாக உயர்த்தப்படுகிறது. அதிகபட்ச கட்டணம்அதிகபட்ச கட்டணம் 11 ஆயிரம் ரூபாயாக நிர்ணயிக்கப்படுகிறது.

மேலும் 60 - 90 நிமிடம் வரையிலான பயணத்துக்கு குறைந்தபட்ச கட்டணம் 4,500 ரூபாயாகவும், அதிக பட்ச கட்டணம் 13 ஆயிரத்து 200 ரூபாயாகவும் உயர்த்தப்படுகிறது. அதேபோல் 90 - 120 நிமிடம் வரையிலான பயணத்துக்கு குறைந்தபட்சக் கட்டணம் 4,700 ரூபாயிலிருந்து, 5,300ஆக அதிகரிக்கப்படுகிறது. அதிகபட்ச கட்டணம் 12.3 சதவீதம் அதிகரிக்கப் படுகிறது. மேலும் 120 - 150 நிமிட பயணத்துக்கு குறைந்தபட்ச கட்டணம் 6,100 ரூபாயிலிருந்து, 6,700 ரூபாயாகவும், அதிகபட்சக் கட்டணம் 12.42 சதவீதமும் உயர்த்தப்படுகிறது.


latest tamil news


அதே நேரத்தில் 150 - 180 நிமிடங்கள் வரையிலான பயணத்துக்கு குறைந்தபட்ச கட்டணம் 7,400 ரூபாயிலிருந்து 8,300 ரூபாயாக உயர்த்தப்படுகிறது. அதிகபட்ச கட்டணம் 12.74 சதவீதம் உயர்த்தப்படுகிறது. அதேபோல் 180 - 210 நிமிடங்கள் வரை பயணத்துக்கான குறைந்தபட்ச கட்டணம் 8,700 ரூபாயிலிருந்து, 9,800 ரூபாயாகவும், அதிகபட்ச கட்டணம் 12.39 சதவீதமும் உயர்த்தப்படுகிறது. சேவை வரிஇந்தக் கட்டணத்துடன் பாதுகாப்புக் கட்டணம், விமானநிலைய பயனாளர் கட்டணம், ஜி.எஸ்.டி., எனப்படும் சரக்கு மற்றும் சேவை வரி ஆகியவையும் பயணியரிடம் வசூலிக்கப்படும்.இவ்வாறு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுஉள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (14)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
vpurushothaman - Singapore,சிங்கப்பூர்
14-ஆக-202114:23:29 IST Report Abuse
vpurushothaman தனி விமானம் மேற்கொள்வோர்க்கு இரட்டிப்புக் கட்டணம் விதிக்கலாம் இப்போதுதான் முதியோர் சலுகை உட்பட எல்லாவற்றையும் எடுத்து விட்டார்கள். போக்கு வரத்து நெரிசலும் இல்லை. ஏனெனில் விமானப் போக்கு வரத்து குறைக்கப்பட்டுள்ளது. ஒரு வேளை தமிழக மந்திரிகள் தங்கள் மகன்களின் டெல்லி வீட்டைப் பார்க்க அடிக்கடி செல்லுவதால் இருக்குமோ ?
Rate this:
Cancel
Ramesh Sargam - Bangalore,இந்தியா
14-ஆக-202111:56:44 IST Report Abuse
Ramesh Sargam விமான கட்டணத்தை ஏற்றுவார்கள். ஆனால், தாகம் என்று கேட்டால் ஒரு டம்பளர் தண்ணி கூட கொடுக்க மாட்டாங்க. நம்மை எடுத்து செல்லவும் விடமாட்டார்கள், செக்யூரிட்டி என்று காரணம் சொல்லி.
Rate this:
mohan - chennai,இந்தியா
14-ஆக-202112:38:09 IST Report Abuse
mohanவிமானத்தில் தண்ணீர் இலவசம்தான்... குடிக்க தண்ணீர் கொடுக்காவிட்ட்டால் , நீங்கள் தாராளமாக விமான நிறுவனத்திடம் புகார் கூறலாம்......
Rate this:
தமிழ்ச்செல்வன் - Chennai,இந்தியா
14-ஆக-202112:49:34 IST Report Abuse
தமிழ்ச்செல்வன்தண்ணி குடிக்க விடமாட்டாங்க ஏன் என்று யோசித்ததுண்டா ?...
Rate this:
Cancel
Dhurvesh - TAMILANADU ,இந்தியா
14-ஆக-202111:55:46 IST Report Abuse
Dhurvesh மோடி யின் ஆட்சியில் உயர்வு என்று தான் இருக்கனும், குறைகிறது என்கிற பேச்சே வரக்கூடாது அப்படி design அவர்கள் உடையது
Rate this:
Baskar Selvaraj - 630001,இந்தியா
14-ஆக-202112:37:09 IST Report Abuse
Baskar Selvarajஇங்குள்ள ஓட்டை சொகுஸு பேருந்தில் இருபது கிலோமீட்டருக்கு முப்பது ரூபாய் கொடுக்கோறோம். அரசியவாதிகளின் தனியார் பஸ்களில் 700 கிலோ மீட்டருக்கு ரூபாய் 1200 வசூலிக்கப்படுகிறது...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X