போலீஸ் டைரி

Added : ஆக 14, 2021
Share
Advertisement
மின்சாரம் பாய்ந்து வடமாநிலத்தவர் பலிஸ்ரீபெரும்புதுார்: வட மாநிலமான உ.பி., மிர்சாபூரைச் சேர்ந்த அபிநய், 20, ஸ்ரீபெரும்புதுார் அருகே சோமங்கலம் அடுத்த எருமையூர் கிராமத்தில், கல் அரைக்கும் ஆலையில் பணியாற்றி வந்தார்.நேற்று முன்தினம், கல் அரவை இயந்திரத்தை சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்ட அபிநய், மின்சாரம் பாய்ந்து மயக்கமடைந்தார்.அங்கிருந்தோர் மின்சாரத்தை துண்டித்து,

மின்சாரம் பாய்ந்து வடமாநிலத்தவர் பலி
ஸ்ரீபெரும்புதுார்: வட மாநிலமான உ.பி., மிர்சாபூரைச் சேர்ந்த அபிநய், 20, ஸ்ரீபெரும்புதுார் அருகே சோமங்கலம் அடுத்த எருமையூர் கிராமத்தில், கல் அரைக்கும் ஆலையில் பணியாற்றி வந்தார்.நேற்று முன்தினம், கல் அரவை இயந்திரத்தை சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்ட அபிநய், மின்சாரம் பாய்ந்து மயக்கமடைந்தார்.அங்கிருந்தோர் மின்சாரத்தை துண்டித்து, அவரை மீட்டு குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். அங்கு பரிசோதனை செய்த மருத்துவர்கள் அபிநய் இறந்துவிட்டதாக தெரிவித்தனர். சோமங்கலம் போலீசார் விசாரிக்கின்றனர்.

கஞ்சா விற்ற மூவர் கைது
ஸ்ரீபெரும்புதுார்: வண்டலுார் - -மீஞ்சூர் வெளிவட்ட சாலையில், வரதராஜபுரம் புதிய சுங்கச்சாவடி அருகே சோமங்கலம் போலீசார், நேற்று முன்தினம் இரவு வாகன சோதனையில் ஈடுபட்டனர்.அப்போது அந்த வழியாக வந்த ஆட்டோவை மடக்கி சோதனை செய்தனர். ஆட்டோவில் பயணித்த பெருங்களத்துார் ஜான், 35, கபிலன், 28, மோகன், 28, ஆகிய மூவர், கஞ்சாவை பதுக்கி விற்றது தெரிய வந்தது. இவர்களை கைது செய்த போலீசார், அவர்களிடம் இருந்த 1.5 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.

வீடு புகுந்து திருடிய வாலிபர் கைது
உத்திரமேரூர்: உத்திரமேரூர் போலீசார் உத்திரமேரூர் - வந்தவாசி சாலை, அம்மையப்பநல்லுாரில் நேற்று முன்தினம் இரவு, வாகன தணிக்கை செய்தனர்.அப்போது, அவ்வழியாக இருசக்கர வாகனத்தில் வேகமாக வந்த களியாம்பூண்டியைச் சேர்ந்த தினேஷ், 20, என்பவரை பிடித்து விசாரித்தபோது, வண்டிக்காரத் தெருவை சேர்ந்தவர் தியாகராஜன், 69, என்ற ஆசிரியரின் வீட்டில், கடந்த மாதம், 8ம் தேதி திருடியது தெரிந்தது.இதையடுத்து, தினேஷை கைது செய்த போலீசார், அவரிடமிருந்து 1.5 சவரன் நகையை பறிமுதல் செய்தனர்.

பெண்ணிடம் செயின் பறிப்பு
கூடுவாஞ்சேரி: கூடுவாஞ்சேரி அடுத்த கன்னிவாக்கம் கிராமத்தைச் சேர்ந்த டில்லி மனைவி பிரேமாவதி, 43. இவர், அதே பகுதி பஸ் நிறுத்தத்தில் இருந்து வீட்டுக்கு, நேற்று முன்தினம் நடந்து சென்றார்.அப்போது, பின்னால் வந்த இரண்டு பேர், பிரேமாவதி கழுத்திலிருந்த ஆறு சவரன் செயினை பறித்துச்சென்றனர். இதுகுறித்து, கூடுவாஞ்சேரி போலீசார் விசாரித்து வருகின்றனர்.

கஞ்சா விற்றவர் சிக்கினார்
மாமல்லபுரம்: மாமல்லபுரம் அடுத்த பட்டிபுலம் பகுதியில், கடந்த 10ம் தேதி, கஞ்சா விற்ற கும்பலை, போலீஸ் எஸ்.பி., தனிப்படை மற்றும் மாமல்லபுரம் போலீசார் மடக்கினர்.வேலுார் பகுதி வக்கீல் உள்ளிட்ட மூன்று பேரை, போலீசார் கைது செய்து, 2.5 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர்; இருவர் தப்பினர்.தலைமறைவாக இருந்த, சென்னை, அம்பத்துார் நாராயணமூர்த்தியின் மகன் தீனதயாளன், 43, என்பவரை கைது செய்துள்ள போலீசார், மாதவரம் பாக்கியராஜை தேடுகின்றனர்.

சிலை திருடிய மூவர் கைது
செங்கல்பட்டு: செங்கல்பட்டு அடுத்த, இளந்தோப்பு கிராம விநாயகர் கோவிலில், ஐம்பொன்னால் ஆன இரண்டு விநாயகர் சிலை இருந்தன. கடந்த மே மாதம் 27ல், ஐம்பொன் விநாயகர் சிலையை, மர்ம நபர்கள் திருடிச்சென்றனர்.இது குறித்து விசாரித்த செங்கல்பட்டு தாலுகா போலீசார், இளந்தோப்பு சதீஷ், 29, செங்கல்பட்டு கரிமேடு விக்கி, 2, மறைமலை நகர் ஹரிகிருஷ்ணன், 41, ஆகியோரை கைது செய்தனர். மூவரையும், மாவட்ட சிறையில் நேற்று அடைத்தனர். அவர்கள் திருடிய ஐம்பொன் விநாயகர் சிலைகளை பறிமுதல் செய்யப்பட்டன.

விபத்தில் காயமடைந்தவர் பலி
திருவள்ளூர்: கடம்பத்துார் ஒன்றியம், ஸ்ரீதேவி குப்பத்தைச் சேர்ந்தவர் பாபு மகன் சரவணன், 38. இவர் தன் மனைவி அலமேலு, 36, உடன், 'ஹோண்டா' இருசக்கர வாகனத்தில், இம்மாதம் 8ம் தேதி, திருத்தணி நோக்கி சென்றார்.பட்டரைபெரும்புதுார் பஸ் நிறுத்தம் அருகில், பின்னால் வந்த கார் மோதியதில் இருவரும் பலத்த காயமடைந்து சென்னை, அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.சிகிச்சை பலனின்றி, 10ம் தேதி அலமேலு உயிரிழந்த நிலையில், சரவணன் நேற்று முன் தினம் இறந்தார்.

பஸ் மோதி முதியவர் மரணம்
திருவள்ளூர்: திருவள்ளூர் ஈக்காடு பெத்தல்புரம் பகுதியைச் சேர்ந்தவர் ராகவன் மகன் நித்தியானந்தம், 60.நேற்று முன்தினம், தன் இருசக்கர வாகனத்தில் திருவள்ளூர் பஜாருக்கு சென்று, வீட்டிற்கு திரும்பி வந்தார்.அப்போது ஈக்காடு 'பங்க்' அருகே எதிரே வந்த அரசு பஸ், இருசக்கர வாகனத்தின் மீது மோதியதில், நித்தியானந்தம் பலத்த காயமடைந்தார்.திருவள்ளூர் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டபோது, அவர் ஏற்கனவே இறந்தது தெரிந்தது. புல்லரம்பாக்கம் போலீசார் விசாரிக்கின்றனர்.

மணல் கடத்திய பைக் பறிமுதல்
திருவள்ளூர்: திருவள்ளூர் அடுத்த ஆட்டுப்பாக்கம் பகுதியில் செல்லும் ஆற்றில் மணல் அள்ளுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.திருவள்ளூர் தாலுகா போலீசார், மேற்கண்ட பகுதியில் சோதனை நடத்தினர். அப்போது இரு சக்கர வாகனத்தில் மணல் அள்ளிக் கொண்டிருந்தவர் போலீசாரை பார்த்ததும் வாகனத்தை விட்டு தப்பிச் சென்றார். தொடர்ந்து போலீசார் வாகனத்தை பறிமுதல் செய்து, வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.

வாகனம் மோதி இளைஞர் பலி
ஸ்ரீபெரும்புதுார்: ஸ்ரீபெரும்புதுார், திருமூர்த்தி ஆழ்வார் நகரைச் சேர்ந்தவர் மணிகண்டன், 31. சென்னை - -பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில், ஸ்ரீபெரும்புதுார் சுங்கச்சாவடியை கடந்து செல்லும் வாகன ஓட்டிகளிடம், வேர்க்கடலை விற்று வந்தார்.நேற்று, வேர்க்கடலை விற்பனை செய்த போது, அடையாளம் தெரியாத வாகனம் மோதி, சம்பவ இடத்திலேய மணிகண்டன் இறந்தார். ஸ்ரீபெரும்புதுார் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X