சம்பவம் செய்தி

தமிழ்நாடு

‛'டிக்டாக்' மூலம் பழகிய பெண்ணின் ஆபாச வீடியோ வெளியிட்டவர் கைது

Added : ஆக 14, 2021
Share
Advertisement
தேனி:கம்பத்தை சேர்ந்த 33 வயது பெண்ணிடம் 'டிக் டாக்' மூலம் பழகி அவரது படத்தை ஆபாசமாக சித்தரித்து வீடியோ வெளியிட்ட தஞ்சாவூரை சேர்ந்த தர்மரை 35, தேனி சைபர் கிரைம் போலீசார் கைது செய்தனர்.கம்பம் நந்தனார் காலனி 33 வயது பெண். இவர் கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடால் 8 ஆண்டுகளாக பிரிந்து வாழ்கிறார். இவருக்கு 'டிக்-டாக்' மூலம் தஞ்சாவூரை சேர்ந்த தர்மருடன் பழக்கம் ஏற்பட்டது.

தேனி:கம்பத்தை சேர்ந்த 33 வயது பெண்ணிடம் 'டிக் டாக்' மூலம் பழகி அவரது படத்தை ஆபாசமாக சித்தரித்து வீடியோ வெளியிட்ட தஞ்சாவூரை சேர்ந்த தர்மரை 35, தேனி சைபர் கிரைம் போலீசார் கைது செய்தனர்.

கம்பம் நந்தனார் காலனி 33 வயது பெண். இவர் கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடால் 8 ஆண்டுகளாக பிரிந்து வாழ்கிறார். இவருக்கு 'டிக்-டாக்' மூலம் தஞ்சாவூரை சேர்ந்த தர்மருடன் பழக்கம் ஏற்பட்டது. கடந்த ஓராண்டுக்கு முன் இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டது. பின் தர்மர் அலைபேசியில் அழைத்து 'உன்னுடைய வீடியோவை வெளியிட்டு விடுவேன்' என மிரட்டியுள்ளார்.

மேலும் 'வாட்ஸ் ஆப்' மூலம் பெண் தர்மருடன் பேசியதை, ஆபாசமாக சித்தரித்து வீடியோவாக வெளியிட்டார். இதுகுறித்து அவர் கேட்டதற்கு, தகாத வார்த்தைகளால் பேசி மிரட்டியுள்ளார். தேனி மாவட்ட சைபர் கிரைம் இன்ஸ்பெக்டர் அரங்கநாயகி, எஸ்.ஐ., தாமரைக்கண்ணன், ஏட்டு ஜெபராஜ் தலைமையிலான போலீசார், தர்மரை கைது செய்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X