சம்பவம் செய்தி

தமிழ்நாடு

மனைவியை கொன்று நாடகம் முன்னாள் ராணுவ வீரர் கைது

Added : ஆக 14, 2021
Share
Advertisement
தேனி:மனைவியை கழுத்தை நெரித்து கொலை செய்து, 'பிரஷர் காரணமாக இறந்து விட்டார்' என நாடகமாடிய முன்னாள் ராணுவ வீரரை போலீசார் கைது செய்தனர்.தேனி மாவட்டம் சின்னமனுாரைச் சேர்ந்தவர் நடராஜன், 57. ராணுவத்தில் பணியாற்றி ஓய்வு பெற்றவர். இவரது மனைவி சாந்தி, 54. இவர்களது நான்கு மகள்களுக்கு திருமணம் முடிந்து விட்டது. மனைவியுடன் ஏற்பட்ட தகராறில், அவரை நடராஜன் கழுத்தை நெரித்து கொலை

தேனி:மனைவியை கழுத்தை நெரித்து கொலை செய்து, 'பிரஷர் காரணமாக இறந்து விட்டார்' என நாடகமாடிய முன்னாள் ராணுவ வீரரை போலீசார் கைது செய்தனர்.

தேனி மாவட்டம் சின்னமனுாரைச் சேர்ந்தவர் நடராஜன், 57. ராணுவத்தில் பணியாற்றி ஓய்வு பெற்றவர். இவரது மனைவி சாந்தி, 54. இவர்களது நான்கு மகள்களுக்கு திருமணம் முடிந்து விட்டது. மனைவியுடன் ஏற்பட்ட தகராறில், அவரை நடராஜன் கழுத்தை நெரித்து கொலை செய்தார். பின், ஆட்டோவில் ஏற்றி சின்னமனுார் அரசு மருத்துவமனைக்கு சென்று, தன் மனைவிக்கு பிரஷர் உள்ளதென்றும், மயங்கி விழுந்து விட்டார் என்றும் கூறியுள்ளார்.

பரிசோதித்த டாக்டர்கள், சாந்தி இறந்து விட்டதாக கூறினர். ஆனால், கழுத்தில் காயம் இருப்பதாகவும், மரணத்தில் சந்தேகம் உள்ளதாகவும் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். சின்னமனுார் போலீசார் விசாரணையில், மனைவியை கொலை செய்ததை நடராஜன் ஒப்புக் கொண்டார். அவரை போலீசார் கைது செய்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X