பொது செய்தி

தமிழ்நாடு

கண்மாய் ஆக்கிரமிப்பு: உயர்நீதிமன்றம் நோட்டீஸ்

Added : ஆக 14, 2021 | கருத்துகள் (1)
Share
Advertisement
மதுரை-மதுரை வண்டியூர் தியாகராஜன். உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் தாக்கல் செய்த பொதுநல மனு:மதுரை தல்லாகுளத்திலுள்ள சம்பக்குளம் கண்மாய் 27 ஏக்கர் பரப்பளவு கொண்டது. இதை சட்டவிரோதமாக ஆக்கிரமித்து கட்டடங்கள் கட்டப்பட்டுள்ளன. இதனால் கண்மாயில் தண்ணீர் கொள்ளளவு குறைந்துவிட்டது. அருகில் நிலத்தடி நீர் மட்டம் பாதித்துள்ளது. கண்மாயை முறையாக ஆய்வு செய்து, ஆக்கிரமிப்பு ஏற்படாத
 கண்மாய் ஆக்கிரமிப்பு: உயர்நீதிமன்றம் நோட்டீஸ்

மதுரை-மதுரை வண்டியூர் தியாகராஜன். உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் தாக்கல் செய்த பொதுநல மனு:மதுரை தல்லாகுளத்திலுள்ள சம்பக்குளம் கண்மாய் 27 ஏக்கர் பரப்பளவு கொண்டது. இதை சட்டவிரோதமாக ஆக்கிரமித்து கட்டடங்கள் கட்டப்பட்டுள்ளன. இதனால் கண்மாயில் தண்ணீர் கொள்ளளவு குறைந்துவிட்டது. அருகில் நிலத்தடி நீர் மட்டம் பாதித்துள்ளது. கண்மாயை முறையாக ஆய்வு செய்து, ஆக்கிரமிப்பு ஏற்படாத வகையில் பராமரிக்க வேண்டியது பொதுப்பணித்துறையின் கடமை.ஆக்கிரமிப்புகளை அகற்றக்கோரி மதுரை கலெக்டர், பொதுப்பணித்துறை தலைமைப் பொறியாளருக்கு மனு அனுப்பினேன். நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும். இவ்வாறு குறிப்பிட்டார்.நீதிபதிகள் எம்.துரைசுவாமி, கே.முரளிசங்கர் அமர்வு கலெக்டர், பொதுப்பணித்துறை தலைமைப் பொறியாளர், கண்காணிப்புப் பொறியாளருக்கு நோட்டீஸ் அனுப்பி 4 வாரங்கள் ஒத்திவைத்தது.

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
duruvasar - indraprastham,இந்தியா
14-ஆக-202111:22:16 IST Report Abuse
duruvasar உங்கள் உத்தரவுபடி முதலில் அகற்றபடவேண்டிய முக்கியமான ஆக்ரமிப்புக்கள் மதுரையில் உயர்நீதிமன்ற கிளை வளாகமும், ஆயிரக்கணக்கான ஏழை மாணவர்களின் விளக்கொளியான தயா பொறியியல் கல்லூரி வளாகங்களும்,சென்னையில் வள்ளுவர் கோட்டமும், திருப்பூரில் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகங்களும் தான் யுவர் ஆனர். நுனி கிளையிலிருந்தது கொண்டு மரத்தை வெட்டாதீர்கள்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X