பொது செய்தி

தமிழ்நாடு

வணிகர்கள் நல வாரியத்தில் கட்டணமில்லா சேர்க்கை: வரி அலுவலர் தகவல்

Added : ஆக 14, 2021
Share
Advertisement
உசிலம்பட்டி-உசிலம்பட்டி ஒன்றிய அலுவலகத்தில் வணிகவரி, ஊரக வளர்ச்சி மற்றும்நகராட்சித்துறை சார்பில் வணிக நல வாரிய உறுப்பினர் சேர்க்கை சிறப்புமுகாம் நடந்தது.வட்டார வளர்ச்சி அலுவலர் கண்ணன் தலைமை வகித்தார். நகராட்சி கமிஷனர் பாஸ்கரன் முன்னிலை வகித்தார். மாநில வரி அலுவலர் ஜெயராஜ ராஜேஸ்வரன் பேசியதாவது: அமைச்சர் மூர்த்தி வழிகாட்டுதல்படி வணிகவரித் துறை மூலம் வணிகர்கள் நல

உசிலம்பட்டி-உசிலம்பட்டி ஒன்றிய அலுவலகத்தில் வணிகவரி, ஊரக வளர்ச்சி மற்றும்நகராட்சித்துறை சார்பில் வணிக நல வாரிய உறுப்பினர் சேர்க்கை சிறப்புமுகாம் நடந்தது.வட்டார வளர்ச்சி அலுவலர் கண்ணன் தலைமை வகித்தார். நகராட்சி கமிஷனர் பாஸ்கரன் முன்னிலை வகித்தார். மாநில வரி அலுவலர் ஜெயராஜ ராஜேஸ்வரன் பேசியதாவது: அமைச்சர் மூர்த்தி வழிகாட்டுதல்படி வணிகவரித் துறை மூலம் வணிகர்கள் நல வாரியத்தில் ஆண்டுக்கு ரூ.40 லட்சத்திற்குள் குறைவாக தொழில் செய்யும் வணிகர்களுக்கும், உள்ளாட்சி அமைப்புகளில் டி அண்ட் ஓ உரிமம்பெற்ற வணிகர்களுக்கும் அக்., 14 வரை கட்டணமில்லா உறுப்பினர் சேர்க்கை நடக்கிறது. உறுப்பினராவோருக்கு அரசு பல்வேறு சலுகைகளை வழங்குகிறது. குழந்தைகளுக்கான கல்வி கட்டணமாக ரூ.5 ஆயிரமும், தொழிற்கல்விக்கென ரூ.10 ஆயிரமும் வழங்கப்படுகிறது. உறுப்பினர், அவரது குடும்பத்தினருக்கு குறிப்பிட்ட சில சிகிச்சைக்கு மருத்துவ உதவியாக ரூ.50 ஆயிரம் வழங்கப்படுகிறது. ஏதேனும் அசம்பாவிதம் ஏற்பட்டால் குடும்ப நல நிதியாக ரூ.ஒரு லட்சம் வழங்கப்படுகிறது. குறு, சிறு வியாபாரிகள் இந்த வாய்ப்பை பயன்படுத்திடலாம் என்றார்.துணை வரி அலுவலர்கள் கர்ணன், முகமது ஷரீப், உதவியாளர் சுரேஷ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X