ஆக்கிரமிப்பு கட்டடம் அகற்றம்| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

ஆக்கிரமிப்பு கட்டடம் அகற்றம்

Added : ஆக 14, 2021
Share
மூணாறு-கேரளா மூணாறில் அரசு நிலத்தை ஆக்கிரமித்து கட்டிய கட்டடங்களை வருவாய்த்துறையினர் அகற்றினர்.அங்கு இக்கா நகரில் வருவாய்த்துறை, மின்வாரியத்திற்கு சொந்தமான நிலங்களை ஆக்கிரமித்த இருவர் அதில் வீடு கட்டுமான பணிகளை செய்தனர். மூணாறு கிராம அலுவலர் ஜாண்சன் தலைமையில் வருவாய்துறையினர் நிலம் பாதுகாப்பு படையினரின் உதவியுடன் ஆக்கிரமிப்புகளை அகற்றினர். கட்டுமானத்திற்கு

மூணாறு-கேரளா மூணாறில் அரசு நிலத்தை ஆக்கிரமித்து கட்டிய கட்டடங்களை வருவாய்த்துறையினர் அகற்றினர்.அங்கு இக்கா நகரில் வருவாய்த்துறை, மின்வாரியத்திற்கு சொந்தமான நிலங்களை ஆக்கிரமித்த இருவர் அதில் வீடு கட்டுமான பணிகளை செய்தனர். மூணாறு கிராம அலுவலர் ஜாண்சன் தலைமையில் வருவாய்துறையினர் நிலம் பாதுகாப்பு படையினரின் உதவியுடன் ஆக்கிரமிப்புகளை அகற்றினர். கட்டுமானத்திற்கு பயன்படுத்திய உபகரணங்களை பறிமுதல் செய்து இருவர் மீதும் நிலம் பாதுகாப்பு சட்டத்தில் வழக்கு பதிவு செய்தனர்.------------

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X