பொது செய்தி

தமிழ்நாடு

தி.மு.க., அரசின் முதல் பட்ஜெட் எப்படி *பொதுமக்கள், வர்த்தகர்கள் கருத்து

Added : ஆக 14, 2021
Share
Advertisement
தேனி -ஸ்டாலின் தலைமையிலான தி.மு.க., ஆட்சியின் முதல் தமிழக அரசு பட்ஜெட்டில் பெட்ரோல் மீதான மாநில வரியில் ரூ.3 குறைப்பு, அரசு ஆக்கிரமிப்பு நிலங்கள் மீட்பு, புதிய குடிநீர் திட்டங்கள், புதிய தொழிற்பேட்டைகள்உள்ளிட்ட அறிவிப்புகளை பல தரப்பினரும் வரவேற்றுள்ளனர். பட்ஜெட் குறித்து தேனி மக்கள், வர்த்தக சங்க நிர்வாகிகள், பொருளாதார வல்லுநர்கள் கூறிய கருத்துக்கள்.... திறன்

தேனி -ஸ்டாலின் தலைமையிலான தி.மு.க., ஆட்சியின் முதல் தமிழக அரசு பட்ஜெட்டில் பெட்ரோல் மீதான மாநில வரியில் ரூ.3 குறைப்பு, அரசு ஆக்கிரமிப்பு நிலங்கள் மீட்பு, புதிய குடிநீர் திட்டங்கள், புதிய தொழிற்பேட்டைகள்உள்ளிட்ட அறிவிப்புகளை பல தரப்பினரும் வரவேற்றுள்ளனர். பட்ஜெட் குறித்து தேனி மக்கள், வர்த்தக சங்க நிர்வாகிகள், பொருளாதார வல்லுநர்கள் கூறிய கருத்துக்கள்.... திறன் மேம்படும்

மதிப்பு கூட்டு வரி நிலுவையில் உள்ள ரூ.28 ஆயிரம் கோடியை வசூலிக்க ‛சமாதான் திட்டம்' துவக்க இருப்பது உண்மையிலேயே வரவேற்கத்தக்கது. ஏனெனில் கொரோனா ஊரடங்கால் வருமானத்திற்கு வழியின்றி தவிக்கும் சூழ்நிலையில் இதுபோன்ற திட்டங்களை செயல்படுத்துவது வரி வருவாயை அதிகரித்து உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த உதவும். 10 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லுாரிகள் திறக்கப்படுவது, ரூ.10 கோடி மதிப்பில் ஸ்மார்ட் வகுப்பறைகள் 25 அரசு கலை ,அறிவியல் கல்லுாரிகளில் துவக்கப்படுவது மாணவர்களின் கற்றல் திறனையும், ஆசிரியர்களின் கற்பித்தல் திறனையும் பன்மடங்கு உயர்த்தும். இதுபோன்று தமிழக பட்ஜெட்டில் பாராட்டத்தக்க அம்சங்கள் பல உள்ளன.-ஆர்.லாவண்யா, கல்லுாரி உதவிப்பேராசிரியை, தேனிபாதிப்பு ஏற்படுத்தும்

மீனவர்களுக்கு மானியம் வழங்கப்படுவது போல் கொரோனாவால் வாழ்வாதாரத்தை இழந்த ஆட்டோ டிரைவர்களுக்கும் மானியம் வழங்க அறிவிப்பு இல்லாதது மிகுந்த மன வருத்தத்தை அளிக்கிறது. அதுதவிர பெண்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணத்திட்டம் மூலம் ஆட்டோ டிரைவர்களின் வாழ்வாதாரம் பாதித்துள்ள நிலையில் டீசல் விலை குறைக்கும் திட்டம் இல்லை என அறிவித்திருப்பது பேரிடியாக உள்ளது. அத்தியாவசிய பொருட்களின் தேவைக்கான இடப்பெயர்ச்சிக்கு உதவும் போக்குவரத்து வாகனங்கள் டீசல் என்ற எரிபொருளால்தான் இயங்குது என்பதை நிதியமைச்சர் மறந்து விட்டார். இது மேலும் பாதிப்பை எற்படுத்தும்-மணிமாறன், ஆட்டோர் டிரைவர், காமராஜபுரம், தேனிமகிழ்ச்சி அளிக்கிறதுஅனைத்து குடும்பங்களின் உண்மையான பொருளாதார நிலையை அறிய தகவல்கள் ஒருங்கிணைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என அறிவித்திருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. இது அனைவருக்கும் ஏற்றத்தாழ்வு இல்லாத அரசு திட்டங்கள் மக்களுக்கு சென்றடைய வழிவகுக்கும். சர்வதேச சுற்றுலாத் தலங்கள், ஆன்மிக ஸ்தலங்களை மேம்படுத்த கூடுதல் நிதி ஒதுக்க வேண்டும். மாநிலத்தில் 865 உயர்நிலைப் பள்ளிகளில் ஸ்மார்ட் வகுப்பறைகள் அமைக்க ரூ.20.76 கோடி ஒதுக்கியிருப்பது மூலம் பள்ளிக்கல்வித்துறையில் உட்கட்டமைப்பு, கற்றல் திறன் வளர்ந்து மாணவர்களின் தனித்திறன் மேம்படும். அவர்கள் பாடங்களை மனப்பாடம் செய்வதை தவிர்த்து சிந்திக்கும் திறனை, பழக்கத்தை ஏற்படுத்தும் வகையில் கல்விக்கான பாடத்திட்டங்களை வகுக்க திட்டமிட்டிருப்பது வரவேற்கத்தக்கது.-எம்.ஜீவிதா, கல்லுாரி உதவி பேராசிரியை, தேனிமேலும் குறைக்க வேண்டும்எனக்கு தினமும் 3 லிட்டர் பெட்ரோல் என மொத்தம் ரூ.312 செலவாகிறது. தற்போது பெட்ரோல் விலை மட்டும் ரூ.3 குறைத்து இன்னும் ஒரு மாதம் கழித்து மேலும் ரூ.2 குறைப்பதாக அறிவித்திருப்பது மகிழ்ச்சி. ஆனால் நிதியமைச்சர், மாநில அரசு பெட்ரோலிய வரிக்காக செலுத்தக்கூறும் வரியை இன்னும் குறைத்தால் மக்களுக்கு பெட்ரோல் குறைவான விலைக்கு வழங்கலாம். இதனை செய்யவிட்டால் என்னை போன்ற மாதசம்பளம் பெற்று வாழ்க்கை நடத்தும் நடுத்தர குடும்பத்தினர் பொருளாதார ரீதியாக மிகுந்த சிரமத்திற்கு ஆளாக நேரிடும். அதனால் கச்சா எண்ணெய்க்கான வரியினங்களில் மாநில வரியினங்களை குறைப்பது குறித்து தீர்க்கமான முடிவு எடுக்க வேண்டும்.யுவராஜ், தனியார் வங்கி மேலாளர், தேனிவளர்ச்சிபெறும்பட்ஜெட்டில் நீர் ஆதார மேம்பாட்டிற்கு முக்கியத்துவம் தரப்பட்டுள்ளது. தமிழக அணைகள் மேம்பாட்டிற்கு ரூ.610 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. அடுத்த 10 ஆண்டுகளில் ஆயிரம் தடுப்பணைகள் கட்ட இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதனால் விவசாயம், குடிநீர் ஆதாரம், கால்நடை வளர்ப்பு வளர்ச்சி பெறும். மகளிர் குழுக்களுக்கான கடன் ரத்து செய்யப்பட்டதால், கொரோனா பாதிப்பில் வாழ்வாதாரம் பாதித்த பலருக்கும் நன்மை கிடைத்துள்ளது. தமிழகத்தில் பல லட்சம் இளைஞர்கள் வேலை வாய்ப்பின்றி தவிக்கின்றனர். இவர்களுக்கு தொழில் வாய்ப்பு தொடர்பான அறிவிப்பு பட்ஜெட்டில் இல்லை. பின் தங்கிய பகுதிகளை கணக்கிட்டு தொழில் மேம்பாடு, புதிய தொழிற்சாலைகள் உருவாக்கப்பட வேண்டும். பெண்களுக்கு தரப்பட்டுள்ள முக்கியத்துவம் வேலை தேடும் இளைஞர்களுக்கும் கிடைக்க வேண்டும். -வி.முத்துமுருகேசன், விவசாயி, பி.தர்மத்துப்பட்டி:சலுகை இல்லைகொரோனாவால் பொருளாதாரத்தில் நெருக்கடியை சந்திந்துள்ள வியாபாரிகளுக்கு வங்கி கடன்களில் வட்டி குறைப்பு, தவணை செலுத்துவதில் தளர்வு உட்பட சலுகை ஏதும் இல்லை. ஜல்ஜீவன் திட்டத்தில் பெரியகுளம் நகர் பகுதிக்கு கொடைக்கானல் அடிவாரம் பேரிஜம் ஏரியிலிருந்து குடிநீர் விநியோகம் சோத்துப்பாறை வழியாக வருகிறது. இதனால் சில நேரங்களில் மாசுபடிந்த நீர் சப்ளையாகிறது. இதற்கு மாற்றாக பேரிஜம் ஏரியிலிருந்து குழாய்தொட்டி வரைக்கும் மெகா குழாய் பதித்து குடிநீர் சப்ளை செய்ய வேண்டும் என எதிர்பார்க்கின்றனர். பெரியகுளத்தில் அரசுகலை மற்றும் அறிவியல் கல்லுாரி அமைக்க வேண்டும். வேலைவாய்ப்பை பெருக்கும் வகையில் துாத்துக்குடி, விழுப்புரம் மற்றும் திருப்பூர் உள்ளிட்ட 4 இடங்களில் டைடல் பார்க் திட்டத்தை வரவேற்கிறேன். தேனிக்கும் இத்திட்டம் அவசியம்.---எல்.பாண்டியராஜன், ஜவுளி வியாபாரிகள் சங்க செயலாளர், பெரியகுளம். --வர்த்தகர்களுக்கு ஏமாற்றம்பெட்ரோல் வரி ரூ. 3 குறைக்கப்படும் என்ற அறிவிப்பு பாராட்டுக்குரியது. டீசல் விலையையும் குறைத்திருக்க வேண்டும். சிறு குறு தொழில்நிறுவனங்களின் சிக்கல்களை தீர்க்க குழு, மகளிர் சுய உதவிக்குழுவினருக்கு கடன் தள்ளுபடி, குக்கிராமங்களுக்கு பாதுகாப்பான குடிநீர் வழங்க திட்டம், நுாறு நாள் வேலைவாய்ப்பிற்கு சம்பளம் ரூ. 300, அதனை150 நாட்களாக வேலை நாட்களை உயர்த்தியிருப்பது, வரிநிலுவையை வசூலிக்க சமாதான் திட்டம் அறிவிக்கப்பட்டிருப்பது வரவேற்கத்தக்கது. 50 ஆண்டுகால வில்லங்க சான்றிதழ்களை பார்த்துக் கொள்ள ஏற்படுத்தப்பட்ட வசதியை 75 ஆண்டாக உயர்த்தியிருக்கலாம். தமிழகம் மின்மிகை மாநிலம் அல்ல என்று கூறியிருப்பது ஆச்சரியமாக உள்ளது. எனினும் வர்த்தகர்கள் பயன்படும் வகையில் பெரிய அளவில் அறிவிப்புகள் இல்லாதது ஏமாற்றமே.-கே.எஸ்.பெருமாள், வர்த்தக சங்க மாநில துணை தலைவர், சின்னமனுார்---வீடுகட்டித்தரவேண்டும்தடுப்பணைகள் கட்டப்படுவது, குளங்கள் துார்வார நிதி ஒதுக்கீடு செய்தது, நகராட்சி, பேரூராட்சிகளில் மண் ரோடு தரம் உயர்த்தப்படுவது, கிராமங்களில் குடிநீர் வசதி மேம்படுத்துவது, பெட்ரோல் மீதான வரி ரூ.3 குறைத்தது வரவேற்கதக்கதாகும். கிராமங்களில் வீடு இல்லாதவர்களுக்கு வீடு கட்டப்படும் என்பதை விட கிராம, நகர் பகுதியில் வீடு இல்லாதவர்களுக்கு இலவசமாக நிலம் தந்து அதில் வீடும் கட்டிக்கொடுத்து அதற்கான தொகையை அரசு தவணை முறையில் வசூலிக்க வேண்டும். அரசு பஸ்களில் பெண்களுக்கு இலவசம் என்பதை விட 60 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் இலவசம் என மாற்ற வேண்டும். படித்த இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு பற்றி பட்ஜெட்டில் இடம் பெறாதது பெரும் ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. அவர்களுக்கு வேலைவாய்ப்பு அளிப்பதன் மூலம் குற்றங்கள் குறைவதற்கு அதிகம் வாய்ப்புகள் உருவாகும் நிலை ஏற்படும். --- கே. கிருஷ்ணவேணி, குடும்பத்தலைவி, போடிவரவேற்புக்குரியதுஅரசு ஊழியர் மகளிர் பேறுகால விடுமுறை 9 மாதங்களிலிருந்து 12 மாதங்களாக உயர்த்தியிருப்பது வரவேற்புக்குரியது. அரசு ஊழியர் பாதுகாப்பு குடும்ப நிதி ரூ. 5 லட்சமாக உயர்த்தியிருப்பது, தீயணைப்பு துறை அறிவியல் சார்ந்து அமைப்பது மதுரையில் மெட்ரோ ரயில் வசதி ஏற்படுத்த ஆய்வு மேற்கொள்ளப்படும் என்பது வரவேற்கத்தக்கது. பழைய ஓய்வூதிய திட்டத்தை செயல்படுத்துவோம் என அறிவிக்காதது வருத்தமளிக்கிறது. தமிழகத்திற்கு தனித்துவமான கல்விக் கொள்கை உருவாக்கப்படும், கல்லுாரியில் ஸ்மார்ட் வகுப்பறைகள் ஏற்படுத்தப்படும் என்பதும் நல்ல விஷயமே. மாணவர்களை மனப்பாட முறையிலிருந்து மாற்றி சிந்திக்கும் முறைக்கு மாற்றும் கல்வி முறை ஏற்படுத்தப்படும் என்ற அறிவிப்பை பாராட்டலாம்--ஆர். ஷர்மிளா, முதுகலை பட்டதாரி ஆசிரியை, காமயகவுண்டன்பட்டிபயனளிக்கும்மகளிர் குழுவுக்கு ரூ.20 ஆயிரம் கோடி கடன் உறுதி செய்யப்படும் என்பதும், குழு கடன் ரூ. 2756 கோடி தள்ளுபடி என்ற அறிவிப்பும் மிகவும் வரவேற்கக்கூடியதாகும். பெட்ரோல் வரி ரூ.3 குறைத்தது வரவேற்றாலும், டீசல் விலையையும் சற்று குறைத்திருக்க வேண்டும். நீரை சேமிக்க 10 ஆண்டுகளுக்குள் ஆயிரம் தடுப்பணைகள் கட்டுவது சிறப்பானதாகும். குளங்களை துார்வார ரூ.111 கோடி ஒதுக்கீடு விவசாயத்திற்கு பயனளிக்கக்கூடியதாகும். பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களின் விசாரணையை துரிதப்படுத்த அரசு எடுத்த முயற்சிக்கு பாராட்டுகிறேன். விவசாயத்திற்கு முக்கியத்துவம் கொடுக்கும் வகையில் பாசன திட்டங்களுக்கு ரூ.6600 கோடி ஒதுக்கீடு செய்தது சிறப்பாகும். பி. கிருஷ்ணவேணி,மகளிர் குழு தலைவி, கூடலுார்

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X