காற்றில் சேதமடையும் வாழை இலை| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

காற்றில் சேதமடையும் வாழை இலை

Added : ஆக 14, 2021
Share
ஆண்டிபட்டி-ஆண்டிபட்டி சுற்றுப்பகுதியில் காற்றில் கிழியும் வாழை இலைகளால் விவசாயிகளுக்கு நஷ்டம் ஏற்படுகிறது. இலைகள் வரத்து குறைவால் விலை உயர்ந்து வருகிறது.ஆண்டிபட்டி அருகே வைகை ஆற்றின் கரையோர கிராமங்களான குன்னுார், அரப்படித்தேவன்பட்டி, சீரங்காபுரம், வேகவதி ஆசிரமம், வெள்ளையத்தேவன்பட்டி, தர்மத்துப்பட்டி, மூணாண்டிபட்டி, புள்ளிமான்கோம்பை உட்பட பல கிராமங்களில் வாழை

ஆண்டிபட்டி-ஆண்டிபட்டி சுற்றுப்பகுதியில் காற்றில் கிழியும் வாழை இலைகளால் விவசாயிகளுக்கு நஷ்டம் ஏற்படுகிறது. இலைகள் வரத்து குறைவால் விலை உயர்ந்து வருகிறது.

ஆண்டிபட்டி அருகே வைகை ஆற்றின் கரையோர கிராமங்களான குன்னுார், அரப்படித்தேவன்பட்டி, சீரங்காபுரம், வேகவதி ஆசிரமம், வெள்ளையத்தேவன்பட்டி, தர்மத்துப்பட்டி, மூணாண்டிபட்டி, புள்ளிமான்கோம்பை உட்பட பல கிராமங்களில் வாழை சாகுபடி உள்ளது. சில மாதத்திற்கு முன் நடவு செய்யப்பட்ட வாழையில் தற்போது இலைகள் அதிகம் வளர்ந்துள்ளது. காற்றின் வேகத்தால் இலைகள் கிழிந்து பயன்படுத்த முடியாது போகிறது. தொடர்ந்து கிழிந்து சேதம் ஆவதால் இலைகளுக்கு தற்போது கிராக்கி ஏற்பட்டுள்ளது.ஆண்டிபட்டி வாழை இலை வியாபாரி டி.பாலமுருகன் கூறியதாவது: இப்பகுதியில் தினமும் 300 முதல் 400 கட்டுகள் வரை மார்க்கெட்டிற்கு வரத்து இருக்கும். காற்றின் சேதத்தால் வரத்து பாதியாக குறைந்துள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன் 200 இலைகள் கொண்ட கட்டு ரூ.600 வரை விலை போனது. தற்போது கட்டு ரூ.1400 முதல் ரூ.1600 வரை உள்ளது. முகூர்த்த நாட்கள் துவங்கினால் தேவை இன்னும் அதிகமாகும். ஆண்டிபட்டியில் வரத்து அதிகமாகும்போது, சென்னை மார்க்கெட்டுக்கு அனுப்புவர். தற்போது உள்ளூர் தேவை மட்டும் பூர்த்தியாகிறது, என்றார்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X