சம்பவம் செய்தி

தமிழ்நாடு

மதுரை ஆதினம் காலமானார்

Added : ஆக 14, 2021
Share
Advertisement
மதுரை:மதுரை ஆதினம் ஞானசம்பந்த அருணகிரிநாதர் 77, நுரையீரல் தொற்றுக்குள்ளாகி தனியார் மருத்துவமனையில் நேற்று இரவு காலமானார்.தமிழகத்தின் மிகத்தொன்மையான சைவ சமய மடங்களில் ஒன்று மதுரை ஆதின மடம். 1500 ஆண்டுகளுக்கு முன் திருஞானசம்பந்தரால் தோற்றுவிக்கப்பட்ட இம்மடத்தின் 292வது ஆதினமாக அருணகிரி நாதர் இருந்தார். பத்திரிகையாளரான இவர், 1975ல் இளைய ஆதினமாக பொறுப்பேற்றார். 1980ல் மூத்த
 மதுரை ஆதினம் காலமானார்

மதுரை:மதுரை ஆதினம் ஞானசம்பந்த அருணகிரிநாதர் 77, நுரையீரல் தொற்றுக்குள்ளாகி தனியார் மருத்துவமனையில் நேற்று இரவு காலமானார்.

தமிழகத்தின் மிகத்தொன்மையான சைவ சமய மடங்களில் ஒன்று மதுரை ஆதின மடம். 1500 ஆண்டுகளுக்கு முன் திருஞானசம்பந்தரால் தோற்றுவிக்கப்பட்ட இம்மடத்தின் 292வது ஆதினமாக அருணகிரி நாதர் இருந்தார். பத்திரிகையாளரான இவர், 1975ல் இளைய ஆதினமாக பொறுப்பேற்றார். 1980ல் மூத்த ஆதினம் சோமசுந்தர ஞானசம்பந்த தேசிக பரமாச்சாரியார் இறந்ததை தொடர்ந்து மடத்தின் பொறுப்பை ஏற்றார்.

இதன்பின் அரசியல்வாதிகள், பிரபலங்களுடன் தொடர்பு ஏற்பட்டு, கட்சி சார்ந்த நிகழ்ச்சிகளிலும் பங்கேற்றார். அவ்வப்போது சர்ச்சைக்குரிய கருத்துகளை தெரிவித்து வந்த நிலையில் 2012ல் இளைய ஆதினமாக நித்யானந்தாவை நியமித்து சர்ச்சையில் சிக்கினார். பின்னர் அவரை நீக்கிவிட்டு, 2019ல் தருமபுரம் ஆதினத்தின் மூத்த தம்பிரானான சுந்தரமூர்த்தியை இளைய ஆதினமாக அறிவித்தார்.

சில ஆண்டுகளாக மூச்சுத்திணறால் அவதிப்பட்டவர், ஒருவாரத்திற்கு முன் மதுரை தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். இருநாட்களாக செயற்கை சுவாசம் அளிக்கப்பட்ட நிலையில் நேற்றிரவு இறந்தார். உடல் ஆதின மடத்திற்கு கொண்டு வரப்பட்டது. இன்று(ஆக.,14) மதுரை முனிச்சாலையில் மடத்திற்கு சொந்தமான இடத்தில் உடல் அடக்கம் செய்யப் படுகிறது.

ஆதினம் கவலைக்கிடமாக இருந்த நிலையில் பேஸ்புக் வழியாக நித்யானந்தா அறிக்கை ஒன்றை வெளியிட்டார். அதில், தன்னை இளைய ஆதினமாக முடிசூட்டியதை நினைவு கூர்ந்துள்ள அவர், மதுரை ஆதினத்திற்கான எல்லா பொறுப்புகளும், உரிமைகளும், கடமைகளும், அதிகாரங்களும், சடங்குகளும் செய்வதற்கான பாரம்பரிய உரிமைகள் பெற்று, ஆன்மிக, மத மற்றும் மொழியியல் சிறப்புகளை புனரமைத்துள்ளதாக தெரிவித்துள்ளார்.

மீண்டும் மதுரை ஆதினம் இடத்தை பிடிக்க நித்யானந்தா திட்டமிட்டுள்ளதாக சர்ச்சை எழுந்துள்ளது.நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் உள்ளதால் அவரால் மடத்திற்குள் நுழைய முடியாது; ஆதினமாகவும் ஆக முடியாது என்கின்றனர் ஹிந்து அமைப்பினர்.

நேற்று காலை மருத்துவமனைக்கு சென்று ஆதினத்தை சந்தித்த தருமபுர ஆதினம் மாசிலாமணி தேசிக ஞானசம்பந்தர், மதுரை மடத்திற்கு வந்து ஆதினம் பயன்படுத்தும் அறைக்கு 'சீல்' வைத்தார்.

இது குறித்து அவர் கூறியதாவது: ஆதினங்கள் வெளியில் சென்றால் சன்னிதானம் இருக்குமிடம், முக்கிய ஆவணங்கள், பொக்கிஷங்கள் இருக்கும் இடத்தை பூட்டி சீல்வைப்பது மரபு. அதனடிப்படையில் மதுரை இளைய ஆதினம் மற்றும் வக்கீல், ஊழியர்கள் முன்னிலையில் பூட்டி சீல்வைக்கப்பட்டது.இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X