பொது செய்தி

தமிழ்நாடு

குறைந்த வாடகையில் வேளாண் வாகனங்கள்

Added : ஆக 14, 2021
Share
Advertisement
தேனி-தேனி மாவட்ட விவசாயிகளுக்கு குறைந்த வாடகையில் வேளாண் பணிக்கான வாகனங்கள் உள்ளது. முன்பதிவு செய்து பயன்பெறலாம் என வேளாண் பொறியியல் துறை தெரிவித்துள்ளது.பெட்ரோல், டீசல் விலை உயர்வால் வேளாண் பணிகளில் பயன்படுத்தும் தனியார் வாகனங்களின் வாடகை உயர்ந்துள்ளது. விவசாயிகளுக்கு உதவும் வகையில் மாவட்ட வேளாண் பொறியியல் துறைக்கு சமீபத்தில் பல லட்சம் ரூபாய் மதிப்பிலான

தேனி-தேனி மாவட்ட விவசாயிகளுக்கு குறைந்த வாடகையில் வேளாண் பணிக்கான வாகனங்கள் உள்ளது. முன்பதிவு செய்து பயன்பெறலாம் என வேளாண் பொறியியல் துறை தெரிவித்துள்ளது.பெட்ரோல், டீசல் விலை உயர்வால் வேளாண் பணிகளில் பயன்படுத்தும் தனியார் வாகனங்களின் வாடகை உயர்ந்துள்ளது. விவசாயிகளுக்கு உதவும் வகையில் மாவட்ட வேளாண் பொறியியல் துறைக்கு சமீபத்தில் பல லட்சம் ரூபாய் மதிப்பிலான புதிதாக 6 டிராக்டர்கள், மண் அள்ளும் இயந்திரங்கள், மண் தள்ளும் டோசர்கள் ஆகியவை வழங்கப்பட்டுள்ளன. இவை வாடகைக்கு வழங்கப்படுகிறது.டிராக்டர் ஒரு மணிநேரத்திற்கு ரூ.340, டிராக்டருடன் இணைந்த குழிதோண்டும் வாகனம் ரூ. 340, மண் அள்ளும் இயந்திரம் ஜேசிபி ரூ.660, மண் தள்ளும் பெரிய டோசர் ரூ.840 வாடகையில் வழங்கப்படுகிறது. விவசாயிகள் பொறியியல் துறையில் முன்பதிவு செய்து கொண்டால் முன்னுரிமை முறையில் வாகனங்கள் வழங்கப்படும். தேனி, பெரியகுளம். ஆண்டிபட்டி, க.மயிலாடும்பாறை வட்டார விவசாயிகள் 99407 02357, சின்னமனுார், போடி, உத்தமபாளையம், கம்பம் வட்டார விவசாயிகள் 94863 63555 அலைபேசியில் உதவி செயற்பொறியாளரை தொடர்பு கொண்டு விபரம் பெறலாம்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X