அரசியல் செய்தி

தமிழ்நாடு

சிறுபான்மை மக்கள் தாக்கப்படுவது தி.மு.க., ஆட்சியில் தான்: வேலூர் இப்ராஹிம்

Added : ஆக 14, 2021
Share
Advertisement
திருப்பரங்குனறம்:சிறுபான்மையினர் தாக்கப்படுவது தி.மு.க., ஆட்சியில்தான் என பா.ஜ., சிறுபான்மை பிரிவு தேசிய செயலாளர் வேலுார் இப்ராஹிம் தெரிவித்தார்.பா.ஜ., மதுரை நகர் சிறுபான்மையினர் அணி சார்பில் திருப்பரங்குன்றத்தில் நடந்த மத நல்லிணக்க கலந்துரையாடலில் சிறுபான்மை பிரிவு தேசிய செயலாளர் இப்ராஹிம் பேசியதாவது:இந்தியா முழுவதும், இஸ்லாமியர்களும், கிறிஸ்தவர்களும் பா.ஜ, வில்

திருப்பரங்குனறம்:சிறுபான்மையினர் தாக்கப்படுவது தி.மு.க., ஆட்சியில்தான் என பா.ஜ., சிறுபான்மை பிரிவு தேசிய செயலாளர் வேலுார் இப்ராஹிம் தெரிவித்தார்.

பா.ஜ., மதுரை நகர் சிறுபான்மையினர் அணி சார்பில் திருப்பரங்குன்றத்தில் நடந்த மத நல்லிணக்க கலந்துரையாடலில் சிறுபான்மை பிரிவு தேசிய செயலாளர் இப்ராஹிம் பேசியதாவது:இந்தியா முழுவதும், இஸ்லாமியர்களும், கிறிஸ்தவர்களும் பா.ஜ, வில் அதிகளவில் இணைகின்றனர்.

இதை பொறுக்கமுடியாத பயங்கரவாத, பிரிவினைவாத சக்திகளும் தேச விரோத கட்சிகளும் தொடர்ந்து சிறுபான்மையினரை அச்சுறுத்துகின்றனர். தமிழகத்திலும் அதுபோன்ற நிலை தொடர்ந்து கொண்டு இருக்கிறது. தி.மு.க., ஆட்சியில் இஸ்லாமிய மக்களிடத்தில் பா.ஜ., வை கொண்டு செல்லும் நிர்வாகிகளுக்கு முழுமையான பாதுகாப்பு தரப்படவில்லை.எங்களை போன்று அச்சுறுத்தலை சந்திக்கக்கூடியவர்கள் மதுரைக்கு வரும்போது முறையான போலீஸ் பாதுகாப்பு வழங்கப்படாதது மட்டுமல்லாமல், இஸ்லாமியப் பகுதிகளில் நாங்கள் செல்வதற்கு தடை விதிக்கப்படுகிறது.

சிறுபான்மை மக்கள் தாக்கப்படுவது தி.மு.க., ஆட்சியில்தான் என உறுதியாக கூற முடியும். தி.மு.க., ஆட்சியில் தான் அடிப்படைவாத சக்திகள் பலம் பெறுகிறார்கள். அவர்கள் இளைஞர் களை தவறான வழிகளில் ஊக்கப்படுத்துகின்றனர், என்றார்.முன்னதாக கூட்டத்திற்கு செயற்குழு உறுப்பினர் தேவ்ஜில் தலைமை வகித்தார். நகர் தலைவர் பஷீர் அகமது, மாவட்ட தலைவர் சிரில் ராயப்பன் முன்னிலை வகித்தனர். மாநில செயலாளர் கல்வாரி தியாகராஜன் வரவேற்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X