இடைத்தேர்தலில் பா.ஜ., வெல்லும் திரிணமுல் தலைவர் மீண்டும் கருத்து

Added : ஆக 14, 2021
Share
Advertisement
கோல்கட்டா:''மேற்கு வங்க இடைத்தேர்தலில் பா.ஜ., வெல்லும்,'' என, திரிணமுல் காங்கிரசைச் சேர்ந்த முகுல் ராய் மீண்டும் கூறி உள்ளார்.மேற்கு வங்கத்தில், முதல்வர் மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணமுல் காங்., ஆட்சி அமைந்துள்ளது.திரிணமுல் காங்., மூத்த தலைவரான முகுல் ராய், 2017ல் பா.ஜ.,வில் இணைந்தார்.கடந்த சட்டசபை தேர்தலில் நாடியா மாவட்டம் கிருஷ்ணாநகர் வடக்கு தொகுதியில் பா.ஜ.,

கோல்கட்டா:''மேற்கு வங்க இடைத்தேர்தலில் பா.ஜ., வெல்லும்,'' என, திரிணமுல் காங்கிரசைச் சேர்ந்த முகுல் ராய் மீண்டும் கூறி உள்ளார்.

மேற்கு வங்கத்தில், முதல்வர் மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணமுல் காங்., ஆட்சி அமைந்துள்ளது.திரிணமுல் காங்., மூத்த தலைவரான முகுல் ராய், 2017ல் பா.ஜ.,வில் இணைந்தார்.

கடந்த சட்டசபை தேர்தலில் நாடியா மாவட்டம் கிருஷ்ணாநகர் வடக்கு தொகுதியில் பா.ஜ., சார்பில் வென்ற அவர், பின் திரிணமுல்லில் இணைந்து, சட்டசபை பொதுக்கணக்கு குழு தலைவரானார்.அவரது தொகுதிக்கான இடைத்தேர்தலில் பா.ஜ., வெற்றி பெறும் என, சமீபத்தில் பத்திரிகையாளர்களிடம் கூறினார். பின், தவறுதலாக அதுபோல் கூறியதாக சமாளித்தார்.

இந்நிலையில் செய்தியாளர்களிடம் முகுல் ராய் கூறியதாவது:கிருஷ்ணாநகர் வடக்கு தொகுதி இடைத்தேர்தலில் பா.ஜ., வெற்றி பெறும். அங்கு திரிணமுல் காங்.,கின் வெற்றி குறித்து மக்கள் முடிவு செய்வர்.திரிபுராவில் 2023ல் நடைபெறும் சட்டசபை தேர்தலில் திரிணமுல் பெரும் வெற்றி பெறும். கட்சி தலைமை உத்தரவிட்டால் அங்கு பணியாற்ற தயாராக உள்ளேன்.இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X