அவலாஞ்சி அணையில் இருவர் மூழ்கினர்| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

அவலாஞ்சி அணையில் இருவர் மூழ்கினர்

Added : ஆக 14, 2021
Share
ஊட்டி:ஊட்டி அருகே அவலாஞ்சி அணையில், இருவர் மூழ்கினர்; ஒருவர் உடல் மீட்கப்பட்டது.நீலகிரி மாவட்டம், எடக்காடு நடுஹட்டியை சேர்ந்த மணிகண்டன், இவருக்கு சொந்தமான தேயிலை தோட்டம் எமரால்டு அருகே உள்ளது. நேற்று, தோட்டத்தில் நடந்த விருந்தில் தொழிலாளர்கள் பங்கேற்றனர். விருந்தை முடித்து மாலையில் வீடு திரும்பினர். சிலர் அவலாஞ்சி அணை அருகே சென்றனர். இதில், நடுஹட்டியை சேர்ந்த

ஊட்டி:ஊட்டி அருகே அவலாஞ்சி அணையில், இருவர் மூழ்கினர்; ஒருவர் உடல் மீட்கப்பட்டது.

நீலகிரி மாவட்டம், எடக்காடு நடுஹட்டியை சேர்ந்த மணிகண்டன், இவருக்கு சொந்தமான தேயிலை தோட்டம் எமரால்டு அருகே உள்ளது. நேற்று, தோட்டத்தில் நடந்த விருந்தில் தொழிலாளர்கள் பங்கேற்றனர். விருந்தை முடித்து மாலையில் வீடு திரும்பினர். சிலர் அவலாஞ்சி அணை அருகே சென்றனர்.

இதில், நடுஹட்டியை சேர்ந்த சரவணன், 37, அணையில் தவறி விழுந்துள்ளார். இவரை காப்பாற்ற அதே பகுதியை சேர்ந்த ராமராஜ், 45, அணையில் குதித்துள்ளார். இருவரும் நீரில் மூழ்கினர். எமரால்டு போலீசார், தீயணைப்பு வீரர்கள் உதவியுடன் உடலை தேடும் பணியில் ஈடுபட்டனர். சரவணன் உடல் மீட்கப்பட்டது.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X