பொது செய்தி

தமிழ்நாடு

என்.எல்.சி.,இந்தியா நிறுவனம் மின் உற்பத்தியில் புதிய சாதனை

Added : ஆக 14, 2021
Share
Advertisement
நெய்வேலி:என்.எல்.சி., இந்தியா நிறுவனம், கடந்த ஜூன் மாதத்தில் 232 கோடியே 94 லட்சத்து 70 ஆயிரம் யூனிட் மின் சக்தியை உற்பத்தி செய்து புதிய சாதனை படைத்துள்ளது.கடலுார் மாவட்டம் நெய்வேலியில் நேற்று நடந்த என்.எல்.சி.,இந்தியா நிறுவனத்தின் இயக்குநர்கள் கூட்டத்தில் நடப்பு நிதியாண்டின் (2021--22), முதல் காலாண்டிற்கான செயல்பாடுகள் வெளியிடப்பட்டது. அதன்படி, அந்நிறுவனம் தனது துணை
 என்.எல்.சி.,இந்தியா நிறுவனம்  மின் உற்பத்தியில் புதிய சாதனை

நெய்வேலி:என்.எல்.சி., இந்தியா நிறுவனம், கடந்த ஜூன் மாதத்தில் 232 கோடியே 94 லட்சத்து 70 ஆயிரம் யூனிட் மின் சக்தியை உற்பத்தி செய்து புதிய சாதனை படைத்துள்ளது.

கடலுார் மாவட்டம் நெய்வேலியில் நேற்று நடந்த என்.எல்.சி.,இந்தியா நிறுவனத்தின் இயக்குநர்கள் கூட்டத்தில் நடப்பு நிதியாண்டின் (2021--22), முதல் காலாண்டிற்கான செயல்பாடுகள் வெளியிடப்பட்டது. அதன்படி, அந்நிறுவனம் தனது துணை நிறுவனத்தையும் சேர்த்து கடந்த ஜூன் 30 ம் தேதியுடன் முடிந்த நடப்பு நிதியாண்டின் முதல் காலாண்டில், ரூ 3221 கோடியே 79 லட்சத்தை மொத்த வருவாயாக ஈட்டி புதிய சாதனை படைத்துள்ளது.நிகர லாபத்தைப் பொறுத்தவரையில், இந்நிறுவனம் தனது துணை நிறுவனத்தையும் சேர்த்து, ரூ. 357 கோடியே 59 லட்சத்தை ஈட்டியுள்ளது.

என்.எல்.சி., இந்தியா நிறுவனத்தால் மட்டும், நடப்பு நிதி ஆண்டின் முதல் காலாண்டில் ஈட்டப் பட்டுள்ள மொத்த வருவாய் ரூ. 2504 கோடியே 45 லட்சமாகும். நிகர லாபத்தைப் பொறுத்த வரையில், நடப்பு நிதி ஆண்டின் முதல் காலாண்டில் இந்நிறுவனம் மட்டும் ரூ. 267 கோடியே 22 லட்சத்தை ஈட்டியுள்ளது.முதல் காலாண்டில் 10 லட்சத்து 17 ஆயிரம் டன் பழுப்பு நிலக்கரியை விற்பனை செய்துள்ளது.

மின் உற்பத்தியை பொறுத்தவரை இந்நிறுவனம் நடப்பு நிதியாண்டின் முதல் காலாண்டில் 663 கோடியே 86 லட்சத்து 30 ஆயிரம் யூனிட் மின் சக்தியையும், துணை நிறுவனத்துடன் இணைந்து 796 கோடியே 55 லட்சத்து 50 ஆயிரம் யூனிட் மின் சக்தியையும் உற்பத்தி செய்துள்ளது. புதுப்பிக்கவல்ல மின்சக்தியைப் பொறுத்தவரையில், இந்நிறுவனம் நடப்பு நிதியாண்டின் முதல் காலாண்டில் 57 கோடியே 25 லட்சத்து 30 ஆயிரம் யூனிட் பசுமை மின் சக்தியை உற்பத்தி செய்துள்ளது.

கடந்த ஜூன் மாதத்தில் 232 கோடியே 94 லட்சத்து 70 ஆயிரம் யூனிட் மின் சக்தியை உற்பத்தி செய்து சாதனை படைத்தது. குறிப்பாக கடந்த ஜூன் 30ம் தேதி மட்டும், 9 கோடியே 16 லட்சத்து 20 ஆயிரம் யூனிட் மின் உற்பத்தி செய்து நிறுவன வரலாற்றில் ஒரு மாதத்திலும், ஒரு நாளிலும் அதிகபட்ச மின் உற்பத்தியை பதிவு செய்து புதிய சாதனையை படைத்துள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X